ஸ்ரெப்ரனீட்சா படுகொலையின் இருபதாவது நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செர்பியப் பிரதமர் அலெக்ஸாந்தர் வுசிச் ஆத்திரம்கொண்ட போஸ்னியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
செர்பிய பிரதமரை தாக்கிய போஸ்னியர்கள்
ஸ்ரெப்ரெனீச்சா படுகொலையில் மாண்டவர்கள் என அண்மையில் அடையாளம் காணப்பட்ட 136 பேரின் உடல் எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ள மயானத்திலிருந்து அவர் வெளியேறியபோது அவரை சிலர் வசைபாடியதோடு, அவர் மீது பாட்டில்களும் வீசப்பட்டிருந்தன.
ஒரு கல் பிரதமரின் தலையில் அடித்திருந்தது.
மிகவும் மோசமான காரியம் இது என்று கூறியுள்ள செர்பியாவின் உள்துறை அமைச்சர் நெபோஸ்யா ஸ்டெஃபானோவிச், இதனை ஒரு கொலை முயற்சியாகவும் கருதலாம் என்று தெரிவித்துள்ளார்.
யுகோஸ்லாவியா பிளவுபட காரணமாக இருந்த யுத்தத்தின் மிக மோசமான சம்பவமாக, முஸ்லிம் ஆண்களும் சிறுவர்களுமாக சுமார் எட்டாயிரம் பேர் கொல்லப்பட்ட ஸ்ரெப்ரனீட்சா படுகொலைகள் பார்க்கப்படுகின்றன.
(Serbian Prime Minister Aleksandar Vucic observes a moment of silence during a ceremony marking the 20th anniversary of the Srebrenica massacre)
Vucic, centre, glasses, is hustled away from the Potocari memorial complex near Srebrenica by his security detail