வடக்கு மாகாணசபையை பலவீனப் படுத்துவதற்காகவே  கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணிலிடமிருந்து  சொகுசு வாகனங்களை (எம்.ஏ.சுமந்திரன்)   பெற்றுக்கொண்டதாகவும்,  ரணிலிடம்  கதைத்து  பெரும்தொகையான  பணத்தை  (சுரேஸ்  பிரேமச்சந்திரன்) பெற்றுக்கொண்டதாகவும்   சி. சிறீதரன்  குற்றம் சாட்டுகிறார்.

(மாவையாருக்கு எதுவும் கிடைக்கவில்லையாம்)

தேர்தல்  நடைபெறவிருக்கின்ற  இந்நேரத்தில்,    தான்  சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு  எதிராகவே  இப்படியான குற்றப்பத்திரிகையை   சி. சிறீதரன்  வாசிப்பதன் நோக்கம்  என்ன தெரியுமா???

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில்  கூட்டமைப்பினர்  யாரை  எதிர்த்து  அல்லது எந்தக்கொள்கையின் அடிப்படையில  நடைபெறவிருக்கின்ற  இப்  பாராளுமன்ற    தேர்தலை  எதிர்கொள்ளப்போகிறார்கள்  என்பதை  முதலில்  பார்ப்போமானால்  சி.  சிறிதரன்    குற்றப்பத்திரிகையை  வாசிக்கும்  நோக்கம்   புரியும்.

ஒரே கொள்கையின்  அடிப்படையில் தான்  தமிழ்தேசிய  கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்களும்  அனைவரும்  இத்தேர்தலில்  போட்டியிடப் போகிறார்கள்.

அதாவது…. தமிழர்களுக்கு  ஒரு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்,  இராணுவத்தினரால்  ஆக்கிரமிக்கப்ட்டிருக்கும் தமிழர்களின் காணிகளை மீட்டுக்கொடுக்கவேண்டும், காணமல்போனவர்களை கண்டுபிடித்துக்கொடுக்கவேண்டும்,  சிறையில் வாடும் தமிழர்களை விடுதலைசெய்யவேண்டும், தமிழர்களின் வாழ்வாதாரத்தை  முன்னேற்றவேண்டும்.. என்கின்ற   உன்னதமான  கொள்கையின்  அடிப்படையில்  தமிழ்தேசிய  கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்களும்  அனைவரும்  இத்தேர்தலை எதிர்கொள்கிறார்கள் என்று   நீங்கள்  நினைப்பீாகளானால்  உங்களைவிட   முட்டாள்கள் வேறு யாரும்  இருக்கமாட்டார்கள்.

எதிர்­வரும்  பாரா­ளு­மன்றத் தேர்­தலில்  ஒவ்வொருவரும்  எப்படியாவது  பாராளுமன்ற  பதவியை   பெற்றுவிடவேண்டும் என்கின்ற  ஒரே  “சுயநலவாத”  கொள்கையின்  அடிப்படையில்  தான்   அனைத்து  தமிழ்தேசிய  கூட்டமைப்பு  பாராளுமன்ற  உறுப்பினர்களும்  போட்டிபோட்டு   இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

யாரை எதிர்த்து போட்டி  போடப்போகிறார்கள்  தெரியுமா?

மகிந்தவையோ  அல்லது  மாற்றுக் கட்சியினரையே  இத்தேர்தலில  கூட்டமைப்பினர் எதிர்த்து போட்டிபோடப் போவதில்லை.  மாறாக..   தங்களை  தாங்களேதான்  எதிர்த்துப் போட்டிபோடப் போகிறார்கள்.

அந்தவகையில்… கூட்டமைபில்  போட்டியிடும்  பாராளுமன்ற  உறுப்பினர்கள்   தங்களில்  யார்  கூடுதலாக தமிழ் மக்களின்   வாக்குகளை  பெற்று  பாராளுமன்றப்   பதவியை  பெற்றுக்கொள்வது   என்கின்ற  போட்டா  போட்டியே     வரும்   பாரா­ளு­மன்றத்  தேர்­தலில்  நடைபெறப்போகின்றது.

அதற்காகத்தான்   ஒருவரை  ஒருவர் குழிபறித்து  பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

அதன் வெளிப்பாடே சிறிதரன்  சுமந்திரனுக்கு  எதிராகவும், மற்றைய தமிழ் தேசிய  கூட்டமைப்பு  பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு   எதிராகவும்  குற்றம்  சுமத்தி   இந்நேரத்தில்  ஊடகங்கள்   மூலம்  பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

இதோ  சிறிதரனின்  இந்தப்  பேச்சை   கேளுங்கள்…

201507032314566243_LTTEAnd-started-a-new-party_SECVPF

முன்னாள் விடுதலைப்புலிகளினால்  தொடங்கப்பட்ட  “ஜனநாயக போராளிகள் கட்சி” யானது  சிறிதரனின் வயிற்றில்  தான் புளியை  கரைத்துள்ளது.

காரணம்  என்ன தெரியுமா?   புலிகளின் போராட்டத்தையும், பிரபாகரனின்  பெயரையும்  வைத்து  பிழைப்பு நடத்தி கொண்டிருந்த   சிறிதரனுக்கு,   உண்மையான  புலிகள்  வரும்போது   பயம்வரும்தானே!

மகிந்தவின்  மீள்வருகையை   தடுப்பதற்காக   சிங்கள  கட்சிகள்தான்  கூட்டணி  அமைத்து  பெரும் முயற்சியில்  ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மாறாக.. மகிந்தவின்   மீள்வருகை  சம்பந்தமாக        தமிழ்தேசிய  கூட்டமைபினருக்கு  எந்தவித  கரிசனையும்  கிடையாது.

மகிந்த ராஜபக்சவின்    மீளவருகை  சம்பந்தமாக  கூட்டமைபினர்கள்   யாரும்    எதிர்க்கவுமில்லை, யாரும் எந்தக் கருத்தையும்   இதுவரை  பதிவு செய்யவில்லை.

மகிந்த வந்தால் என்ன,  மைத்திரி வந்தால் என்ன,  ரணிவந்தால் என்ன, நமக்கு என்ன? நமக்கு தேவை  பாராளுமன்ற பதவி.

– வன்னியிலிருந்து  சாரங்கன்-

Share.
Leave A Reply

Exit mobile version