நீங்கள் செய்த காட்டிக் கொடுப்பு காரணமாக நாடு இரத்தக் காடாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க  குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் திட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

” மைத்திரி  நீர் செய்த இந்தப் பாரிய காட்டிக்கொடுப்பால் நாடு இரத்தக் காடாக மாறும். நீர் இப்படித் துரோகியாக மாறுவீர் என்று எண்ணியிருந்தால் நான் உம்மை பொது வேட்பாளராக நிறுத்தியிருக்கமாட்டேன் ‘ என நேரடியாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , கடும் அதிருப்தியில் லண்டன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா , மைத்திரியை இவ்வாறு சாடும்போது அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளதாகக்  கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஷ உட்பட மோசடியாளர்களுக்கு வேட்பு மனுவை வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால கடந்த  5 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் வீட்டில் வைத்து அவருக்கு உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து மோசடியாளர்கள் அற்ற வேட்பாளர் பட்டியல் ஒன்றைத் தயாரித்து சந்திரிகா கடந்த  7 ஆம் திகதி அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.  33 பேருக்கு வேட்பு மனுவை வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , சந்திரிகா வழங்கிய வேட்பாளர் பட்டியலைக் குப்பையில் எறிந்துவிட்டு மகிந்த ராஜபக்ஷ உட்பட மோசடியாளர்களுக்கு அனுமதியை வழங்கியதுடன்  சந்திரிகாவின் முயற்சியை எட்டி உதைத்துள்ளார்.

இதனையடுத்து  12 பேரின் பெயரைக் குறிப்பிட்டு இவர்களுக்கு வேட்பு மனுவை வழங்காது கட்சியை சுத்தப்படுத்துமாறு  கேட்டுக்கொண்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் இருந்த  4 பேருக்கு மாத்திரமே அனுமதி மறுத்துள்ளார்.

சஜின் வாஸ் குணவர்தன, மேர்வின் சில்வா, துமிந்த சில்வா மற்றும் சரண குணவர்தன ஆகிய  4 பேருக்கு மாத்திரமே வேட்பு மனு வழங்க மறுக்கப்பட்டது.

பண்டாரநாயக்கவினர் கட்டியெழுப்பிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் புனிதப்படுத்தக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் மைத்திரி எட்டி உதைத்துள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

ஹிருனிக்கா யானைச் சின்னத்தில் போட்டி – வேட்புமனுவில் கையெழுத்திட்டார்
11-07-2015

Hirunika Premachandra signsஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் ஹிருனிக்கா போட்டியிடவுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version