முத்துப்பேட்டை : புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் சிறுவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கரகாட்ட பெண் ஆபாச நடனமாடிய வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக வாட்ஸ் அப்பில் ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் கோயில் திருவிழா ஒன்றில் கரகாட்டம் ஆடும் ஒரு பெண், சிறுவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்களுடன் ஆபாச குத்தாட்டம் போடும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவில் நடந்த கரகாட்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 3 சிறுவர்கள் இந்த வீடியோவில் வருகின்றனர்.

சிறுவர்கள் ஒவ்வொருவரையும் வரிசையாக, வலுக்கட்டாயமாக இழுத்து கரகாட்டப்பெண் ஆபாச நடனம் ஆடியுள்ளார்.

ஊர் பொது மக்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியை யாரும் கண்டிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்ககூடியது.

கிராமியக்கலை என்ற பெயரில் நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்த இளம் பிஞ்சுகளின் மனதில் வக்கிர எண்ணத்தை புகுத்தும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த அரசு முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இறந்தவர்களுக்கும் தன்னால் மீண்டும் உயிர் கொடுக்க முடியுமாம் இந்த சாமி…

 


Share.
Leave A Reply

Exit mobile version