நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் மிக முக்கிய பங்காற்றியவர் வாசுதேவ நதாணயக்கார.
அவரது ஜனநாயக இடதுசாரி முன்னணி இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில், போட்டியிடுவதற்காக வாசுதேவ நாணயக்கார கொழும்பு, கம்பகா, மொனராகல உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வேட்பாளர்களின் பட்டியலைக் கையளித்திருந்தார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வாசுதேவ நாணயக்காரவுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது.
இது அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்னி, மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஏனைய இடங்களில் ஐதேகவுடன் கூட்டு
11-07-2015
கொழும்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது.
திருகோணமலை, கண்டி, கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பரவலான செல்வாக்கைப் பெற்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு பெற்றுள்ள ஐதேகவும் இணைந்து போட்டியிடுவது இருகட்சிகளையும் வலுப்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.