தலைநகர் டெல்லியில் காவல்துறை அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜாஸ்வீர், கடந்த வியாழன் அன்று, டெல்லி ராணிபாக் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நண்பரின் வீட்டில் அவருடன் சேர்ந்து மது அருந்திய அவர், மதுவை பரிமாறிய பணிப்பெண்ணை துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண், கடந்த வெள்ளிக் கிழமை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நடந்த விசாரணையில், அங்கிருந்த சி.சி.டி.வி. கமெராவில் பதிவாகியிருந்த கொடூர காட்சியை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக ஜாஸ்வீரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

டெல்லி காவல்துறை ஆணையர் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஜாஸ்வீர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சி.சி.டி.வி. கமெரா பதிவே இவ்வழக்கில் முக்கிய சாட்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version