பாக்தாத்: ஈராக்கின் திக்ரித் நகரில், 1,700க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை, ஐ.எஸ்., வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 2014 ஜூன் மாதம், திக்ரித் அருகே உள்ள ஸ்பீச்சர் ராணுவ முகாமை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்போது ஷியா பிரிவைச் சேர்ந்த, 1,700 ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

சதாம் மாளிகை அருகே…:

அவர்களை, முன்னாள் அதிபர் சதாம் உசேன் மாளிகை அருகே, வெவ்வேறு இடங்களில், பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று புதைத்தனர்.

இது தொடர்பான, நெஞ்சைப் பதற வைக்கும், 22 நிமிட வீடியோ காட்சியை ஐ.எஸ்., நேற்று வெளியிட்டது. அதில், பல வீரர்கள், கெஞ்சிக் கதறியபடி உயிர் பிச்சை கேட்கின்றனர்;

பலர், சில நாட்களுக்கு முன் தான் ராணுவத்தில் சேர்ந்ததாக கூறிஅழுகின்றனர்.ஆனால், ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள், வீரர்களின் கையைக் கட்டி, லாரிகளில் ஏற்று கின்றனர். ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில், ஒவ்வொரு வீரரையும் தள்ளு கின்றனர். அதன் பின், வீரர்களை வரிசையாக படுக்க வைத்து, ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர்.

இந்த வீடியோவில், முகத்தை மறைத்த பயங்கரவாதி ஒருவன், ‘இது உலகிற்கு அறிவிக்கும் செய்தி; குறிப்பாக, ரபிதா நாய்களுக்கு (ஷியா பிரிவினருக்கு பயங்கரவாதிகள் சூட்டியுள்ள பெயர்) விரைவில், உங்கள் இடத்திற்கு நாங்கள் வருகிறோம் என்று, தெரிவித்துக் கொள்கிறோம்’ என, கூறுகிறான்.

 

துாக்கு தண்டனை:

சென்ற ஏப்ரலில் திக்ரித் நகரை, ராணுவமும், கூட்டுப் படைகளும் மீண்டும் கைப்பற்றியதை அடுத்து, ஸ்பீச்சர் படுகொலையில் தொடர்புடைய பயங்கரவாதிகள், 24 பேருக்கு, சில தினங்களுக்கு முன் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகள் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர்.ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள், வீரர்களின் கையைக் கட்டி, லாரிகளில் ஏற்றுகின்றனர்.

ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில், அவர்களை வரிசையாக படுக்க வைத்து, சுட்டுக் கொல்கின்றனர்.

(அதிர்ச்சி வீடியோ.  இளகிய  மனமுடையோ பார்க்கவேண்டாம். 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்.)

n64cz1-1024x580-e1436721989304

Share.
Leave A Reply

Exit mobile version