ஈரான் அணுசக்தி விவகாரம் குறித்து உலக ஆதிக்க நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஈரானின் அணு சக்தியை கட்டுப்படுத்தி அதன் மீதான சர்வதேச தடைகளை தளர்த்தும் இந்த உடன்பாடு மத்திய கிழக்கில் பாரிய மாற்றங்களை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
எனினும் இந்த உடன்பாட்டை ‘வரலாற்றுச் சரணடைவு” என்று இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
ஆஸ்திரிய தலைநகரில் இடம்பெற்ற மரதன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜவாத் ஷரீப் (Iranian Foreign Minister Mohammad Javad Zarif,) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் பெட்ரிகா மெகரினி (European Union High Representative Federica Mogherini) நேற்று கூட்டாக விடுத்த அறிக்கையில் புதிய அறிவிப்பு விடுக்கப்பட்டது.
உடன்பாட்டின்படி அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக மேற்குலகம் சந்தேகிக்கும் ஈரா னின் அணு சக்தி செயற்பாடுகளை நீண்டகாலத் திற்கு மட்டுப்படுத்தவும் அதற்கு பதில் ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகள் அமுல்படுத்தும் தடைகளை அகற்றவும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ் ஹானி ஆகிய இரு தலைவர்களினதும் பாரிய கொள்கை வெற்றி என்று விபரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான இராஜதந்திர முறுகலை முடி வுக்கு கொண்டுவரும் வாக்குறுதியுடனேயே ரவ் ஹானி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரான் ஜனாதிபதியாக தேர்வானார் என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் நீடிககும் தசாப்தகால எதிர்ப்புகளுக்கு இடையில் உள் நாட்டில் உள்ள பலம்மிக்க கடும்போக்காளர்களிடம் இந்த உடன்பாடு குறித்து கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளும் பரஸ்பரம் ‘மிகப்பெரிய சாத்தான்;” என்று குற்றம்சாட்டிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘கடுமையான உழைப்புக்கு பின் நாம் உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம். எமது மக்களுக்கு இறைவனின் கருணை கிடைக்கட்டும்” என்று ஈரான் இராஜதந்திரி ஒருவர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டார்.
எனினும் இந்த உடன்பாட்டை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ‘வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘ஈரானுக்கு பல பில்லியன் டொலர்கள் அதிர்ஷ்டம் கிட்டியிருக்கிறது. அதனைக் கொண்டு பிராந்தியத்திலும் உலகிலும் அதன் ஆக்கிரமிப்பு மற்றும் தீவிரவாத செயல்களை தொடர்ந்து முன் னெடுக்க முடியும்” என்று நெதன்யாகு குறிப்பிட் டார்.
எனினும் இந்த உடன்பாட்டை வரலாற்று முக்கியம் வாய்ந்தது என்று வர்ணித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் “நம்பிக்கையின் புதிய வாயில் திறக்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டார்.
ஈரான் மற்றும் ஆறு உலக ஆதிக்க நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டதாகும்.
இதில் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க உலக ஆதிக்க நாடுகள் முயற்சித்ததோடு ஈரான் தன் மீதான தடைகளை தளர்த்த அழுத்தம் கொடுத்து வந்தது.
இதில் ஆஸ்திரிய தலைநகரில் இரு தரப்புக் கும் இடையில் கடந்த மூன்று வாரங்களாக இறு திக் கட்ட பேச்சுவார்த்தை இழுபறியுடன் நீடித்தது.
அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் சாரிப்புக்கு இடையில் முன்னர் இல்லாத வகை யில் பேச்சுவார்த்தை நீடித்தது.
இறுதி உடன்பாடு மீறப்படும் பட்சத்தில் தடை கள் 65 தினங்களுக்குள் மீண்டும் அமுலுக்கு வரும் வகையிலேயே இணக்கப்பாடு ஏற்பட்டதாக மேற்கத்தேய இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ஈரான் மீதான ஆயுதத் தடை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நீடிக்கும் என்ப தோடு ஏவுகணை தொழில்நுட்பத்தை பெற ஈரானு க்கு இருக்கும் தடை எட்டு ஆண்டுகளுக்கு நீடிக் கவுள்ளது.
இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் இறுதி உடன்பாடு குறித்த விபரம் நேற்று பின்னே ரம் வரை வெளியாகாத போதும், உள்ளடக்கப் பட்டிருக்கும் சில விபரங்கள் வெளிவந்துள்ளன.
ஈரானில் உள்ள அணுத் தளங்களை மேற் பார்வையிட சமரசம் ஏற்பட்டிருப்பதாக ஏ.பி. செய்திச் சேவைக்கு இராஜதந்திரிகள் குறிப்பிட் டுள்ளனர்.
ஈரானின் இராணுவ தளங் களை மேற் பார்வையிட ஐ.நா. அணு கண்காணிப்பாளர்க ளுக்கு ஈரான் அனுமதி அளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தவிர, ஈரான் மீதான எண்ணெய் மற்றும் எரிவாயு, பணப்பரிமாற்றம், விமான மற்றும் கப்பல் போக்குவரத்து தடைகள் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.
இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்ப இயந்திரங்களை கொள்வனவு செய்ய ஈரானுக்கு இருந்த தடை அகற்றப்படுகிறது. அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் பில்லியன் டொலர் சொத்துகள் விடுவிக்கப்படவுள்ளன.
ஈரான், இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிப்ப தில்லை என்பதோடு அதன் எதிரிகளுக்கு ஆதர வும் வழங்கி வருகிறது.
மறுபுறத்தில் சுன்னி முஸ்லிம் ஆட்சியில் உள்ள அரபு நாடுகள்- குறிப்பாக சவூதி அரேபியா, ”ஷியா பெரும்பான்மை நாடான ஈரான், சிரியா, யெமன் மற்றும் பல இடங்களில் தனது எதிரிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட் டுகின்றன.
எனினும் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) மற்றும் சுன்னி முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் போன்ற பொது எதிரிகள் இருப்பது இரு தரப்பினதும் உறவு பலம் பெறுவதற்கு பிரதான காரணியாக கருதப்படுகிறது.