யானைகள் நீந்தி விளையாடுவதற்கான மிகப்பெரிய கண்ணாடி நீச்சல் குளம் ஜப்பானிய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
பியூஜி சபாரி பார்க் என்ற ஜப்பானை சேர்ந்த மிருகக்காட்சி சாலையில் யானைகள் நீந்தி விளையாடுவதை பார்வையாளர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கண்ணாடி நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த பூங்காவில் செல்ல பிராணிகளாக உள்ள சிங்கக்குட்டிகளை பார்வையாளர்கள் தட்டிக்கொடுக்கவும் கட்டிப் பிடிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.