சோமா­லி­யா­வி­லி­ருந்து செயற்­படும்  அமைப்­பினர் 2015 ஜூலை மாதம் 7ஆம் திகதி கென்யா நாட்டிற்குள் புகுந்து ஒரு தாக்­கு­தலை நடாத்தி 14 அப்­பா­வி­களைக் கொன்­ற­துடன் மேலும் 11 பேரைக் காயப்படுத்தி­யுள்­ளனர். கொல்­லப்­பட்­ட­வர்­களில் பெரும் பான்­மை­யா­ன­வர்கள் கல் அகழ்வு செய்யும் ஏழைத் தொழி­லா­ளர்கள்.

அல்-கைதாவின் இணை அமைப்­பாகக் கரு­தப்­படும் அல்–ஷபாப் அமைப்பு சோமா­லி­யா­விலும் அதைச் சூழ உள்ள நாடு­க­ளிலும் உள்ள பல வலு­வற்ற இலகு இலக்­குகள் மீது தாக்­கு­தல்கள் நடத்­து­வதை வழக்­க­மாகக் கொண்­டுள்­ளது.

சோமா­லிய எல்­லையை ஒட்­டிய கென்­யாவின் மந்­தேரா நகரில் அதி­காலை ஒரு மணி­ய­ளவில் கடும் வெப்பம் கார­ண­மாக வெளியில் படுத்­து­றங்கிக் கொண்­டி­ருந்த தொழி­லா­ளர்கள் மீது முதலில் கைக்­குண்­டு­க­ளாலும் பின்னர் துப்­பாக்­கி­க­ளாலும் தாக்­குதல் நடத்தப் பட்­டது.

தாக்­குதல் தொடங்­கிய பத்­தா­வது நிமி­டத்தில் கென்­யாவின் காவற்­று­றை­யினர் அவ்­வி­டத்­திற்குச் சென்­றனர். அதற்குள் தாக்­கு­த­லா­ளிகள் தப்பி ஓடி­விட்­டனர்.

கென்­யாவில் பல சோமா­லி­யர்கள் வாழ்­வதால் அல்–ஷபாப் போரா­ளி­களால் அங்கு இல­கு­வாக நுழைய முடி­கின்­றது.

ZbrBoattack on Garissa University in Kenya

கொடூ­ர­மான தாக்­குதல்

2014ஆம் ஆண்டு டிசம்­ப­ரிலும் கென்­யா­விற்குள் நுழைந்த அல்–ஷபாப் போரா­ளிகள் 36 முஸ்லிம் கற்­குழித் தொழி­லா­ளர்­களைக் கொன்­றி­ருந்­தனர்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அல்–ஷபாப் அமைப்­பினர் தமது தாக்குதல்­க­ளி­லேயே கொடூ­ர­மான ஒரு தாக்குதலை வட கிழக்குக் கென்­யாவில் உள்ள கரிஸ்ஸா பல்­க­லைக்­க­ழ­கத்தில்  (Garissa University in Kenya)
செய்­தி­ருந்­தனர்.

அதில் இஸ்­லா­மி­ய­ரல்­லாத 147 பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் கொல்­லப்­பட்­டனர். முக­மூடி அணிந்த நான்கு அல்–ஷபாப் அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் கரிஸ்ஸாப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் அறை­க­ளுக்குள் அதி­காலை 5 மணிய­ளவில் சென்று அங்­குள்ள கிறிஸ்­தவ மாண­வர்­களைக் கொன்­றனர்.

எந்த ஒரு முன்­னேற்­பாடோ பாது­காப்போ எமது தாக்­கு­தல்­களில் இருந்து எவ­ரையும் பாது­காக்க மாட்­டாது என அல்–ஷபாப் அமைப்­ பினர் அப்­போது சூளு­ரைத்­தனர்.

நைரோ­பியில் வெஸ்ற்கேற் கடைத் தொகுதியில் அல்–ஷபாப் அமைப்­பினர் செய்த தாக்­கு­தலில் அமெரிக்காவைச் சேர்ந்­த­வர்­களும் பங்குபற்­றினர்.

அந்தத் தாக்­கு­தலின் காணொ­ளியை அமெ­ரிக்­கா­வி­லுள்ள இஸ்­லா­மி­யர்­க­ளிடம் காட்டி மேலும் பல கடைத் தொகு­தி­களில் தாக்­குதல் செய்­வ­தற்கு போரா­ளிகள் தேவை எனப் பரப்­புரை செய்து ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்­கைகள் செய்­யப்­பட்­டன.

யார் இந்த அல்-­ஷபாப் அமைப்­பினர்?

ஹரகட் அல்-ஷபாப் அல்–மு­ஜா­கிதீன் (Harakat al-Shabaab al-Mujahideen) என்னும் பெய­ரு­டைய அமைப்பை சுருக்க­மாக அல்–ஷபாப் என அழைப்பர்.

அல்–ஷபாப் என்றால் இளையோர் எனப் பொருள்­படும். மத ரீதி­யாக அல்-­ஷபாப் அமைப்பு சவூதி அரே­பி­யாவின் வஹ்­ஹாபிக் கொள்­கையை தமது இறை நம்­பிக்­கை­யாகக் கொண்­ட­வர்கள்.

இஸ்­லா­மிய நீதி­மன்­றங்­களின் ஒன்­றியம் எனப்­படும் மத­வாத அமைப்பின் இளைஞர் பிரிவில் இருந்து அல்–ஷபாப் உரு­வா­னது.

இதை அல்–கைதா அமைப்பின் சோமாலியக் கிளை எனவும் சொல்­லப்­பட்­ட­துண்டு. 2006ஆம் ஆண்டில் இருந்து சோமா­லி­யா வின் பெரும்­ப­கு­தியை அல்-­ஷபாப் தனது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருந்­தது.

பின்னர் அமெ­ரிக்க நிதி­யு­த­வி­யுடன் ஆபி­ரிக்க ஒன்­றி­யப்­ப­டைகள் பல பிர­தே­சங்­களில் இருந்து விரட்­டினர். இப்போதும் பல கிராமப் பகு­திகள் அல்-­–ஷபாப் அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருக்­கின்­றன.

அங்கு இஸ்­லா­மியச் சட்­டங்கள் கடு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. தற்­போது அல்–ஷபாப் அமைப்பில் ஒன்­ப­தி­னா­யிரம் பேர் இருப்­ப­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


அல்-ஷபாபின் மீது அமெ­ரிக்கா நேரடித் தாக்­குதல்

2013 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் சீல் பிரி­வினர் சோமா­லியக் கடற்­க­ரையில் இரவில் இர­க­சி­ய­மாகத் தரை­யி­றங்கி அல்–ஷபாப் போரா­ளி­களின் நிலை ஒன்றின் மீது ஓரு ஈரூ­டகத் தாக்­குதல் நடத்­தினர்.

இவர்­களின் நகர்வை அல்–ஷபாப் அமைப்பின் போராளி ஒருவர் அவ­தானித்து மற்றப் போரா­ளி­களை உஷார் படுத்திவிட்டார். இதில் பலர் கொல்­லப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அமெ­ரிக்­கர்கள் தேடிச்­சென்ற அல்–ஷபாப் தலைவர் அஹ்மட் கொடேன் அகப்­ப­ட­வில்லை. இத்­தாக்குதல் எதிர்­பாராத பின்­ன­டைவைச் சந்­தித்­த­ப­டியால் இடை நிறுத்­தப்­பட்­டது.

அமெ­ரிக்கப் படை­யினர் 15 நிமிடச் சண்­டையின் பின்னர் பின்­வாங்கி விட்­டனர். இருந்தும் அமெ­ரிக்க தரப்பில் எந்­த­வித ஆளணி இழப்பும் ஏற்­ப­ட­வில்லை.

கவன ஈர்ப்புப் போர்

அல்–ஷபாப் அமைப்­பினர் ஆபி­ரிக்க மக்­க ளின் கவ­னத்தைத் தம்­பக்கம் ஈர்ப்­ப­தற்கும் நிதி திரட்­டு­வ­தற்கும் அடிக்­கடி தாக்­கு­தல்­களை நடத்­து­கின்­றனர்.

அடிக்­கடி செய்­தியில் அடி­பட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்டும் என்­பது அவர்­களின் கொள்­கை­யாக இருக்­கின்­றது. நிதி திரட்­டலில் அவர்கள் அரபுக் குடா­நாட்­டிற்­கான அல்–கைதா அமைப்­பி­ன­ரு­டனும் மக்ரப் பிராந்­தி­யத்­திற்­கான அல்–கைதா அமைப்­பி­ன­ரு­டனும் அவர்கள் போட்டி போட வேண்டி இருக்­கின்­றது.

ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஐரோப்­பாவில் இருந்தும் வட அமெ­ரிக்­காவில் இருந்தும் இளை­ஞர்கள் அல்–ஷபாபில் இணைந்­தனர். ஆனால் தற்­போது அது குறைந்து பலர் ஐ. எஸ். என்னும் இஸ்­லா­மிய அரசு அமைப்பில் பலர் இணை­கின்­றனர்.

ஐ. எஸ்.ஸின் பின்னால் பொக்­கோ­ஹரம்

2015 மார்ச் மாதம் நைஜீ­ரி­யாவில் இருந்து அபூ­பக்கர் செக்கௌ தலை­மையில் செயற்­படும் பொக்­கோ­ஹரம் அமைப்பு தாம் அபூ­பக்கர் அல் – பக்­தாதி தலை­மையில் இயங்கும் ஐ.எஸ். எனப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்புடன் இணைந்து செயற்­ப­டு­வ­தாக அறி­வித்­தது.

இந்த அறி­விப்பைத் தாம் வர­வேற்­ப­தாக ஐ.எஸ். அமைப்­பி­னரும் ஒலி நாடா மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தினர்.

நைஜீ­ரியா, நிஜர், கமரூன் ஆகிய நாடுகள் இணைந்து பொக்­கோ­ஹரம் அமைப்­பி­ன­ருக்கு எதி­ராகத் தமது தாக்­கு­தலைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யதால் ஏற்­பட்ட அழுத்­தத்தால் பொக்­கோ­ஹரம் அமைப்­பினர் இப்­படி அறி­வித்­த­தாகச் சொல்­லப்­பட்­டது.

ஆனால் பொக்­கோ­ஹரம் அமைப்­பினர் வலு­வி­ழந்து விட­வில்லை என அவர்கள் அண்­மைக்­கா­லங்­க­ளாக நடத்தும் தாக்­கு­தல்கள் சுட்டிக் காட்­டு­கின்­றன.

பொக்­கோ­ஹரம் அமைப்பின் வலு­வின்மை என்­பது அதன் ஒற்­றுமை இன்­மை­யாகும். மற்ற இஸ்­லா­மிய மத­வாத அமைப்­புக்­களில் இல்­லாத அள­விற்கு பல உட்­பி­ரி­வு­களும் பிள­வு­களும் பொக்­கோ­ஹரம் அமைப்­பிற்குள் இருக்­கின்­றன.

பொக்கோ ஹர­மி­னரின் நட்பை ஏற்றுக் கொண்ட ஐ. எஸ். அமைப்­பினர் அவர்­க­ளது தாக்­கு­தல்­களை எதி­யோப்­பியா, தன்­சா­னியா ஆகிய நாடு­க­ளிற்கும் விரிவுபடுத்­தும்­படி கூறினர்.

எடுத்த உறுதி மொழி

அல்–ஷபாப் அமைப்­பினர் அல்–கைதா அமைப்­பி­ன­ருடன் இணைந்து செயற்­படும் தமது விருப்­பத்தை 2009ஆம் ஆண்டு தெரி வித்­தி­ருந்­தனர். பின்லாடன் கொல்­லப்­பட்ட பின்னர் 2012ஆம் ஆண்டு அல்–கைதா அமைப்­பினர் அல்–ஷபாப் அமைப்­பி­ன­ருக்கு பயிற்சி ­களும் படைக்­க­லங்­களும் புதிய தொழில்­நுட்­ப வசதிகளையும் வழங்கத் தொடங்­கினர்.

ஆப்­கா­ னிஸ்­தா­னிலும் பா­கிஸ்­தா­னிலும் பல அல்–ஷபாப் போரா­ளி­க­ளுக்கு பயிற்­சிகள் வழங்­கப்­பட்­டன. இதைத் தொடர்ந்து அல்–கைதாத் தலைவர் அய்மன் அல்–ஜவா­ஹி­ரிக்குத் தமது கீழ்ப்­ப­டிவை உறுதிசெய்­வ­தாகத் தெரிவித்து அல்–ஷபாப் அமைப்பினர் ஒரு காணொ­ளியை வெளி­யிட்­டனர்.

அரபுக் ­களைக் கொண்ட அல்–கைதா, ஐ.எஸ். அமைப்பு போன்­ற­வற்­றிற்கு அரபுச் செல்­வந்­தர்­ க­ளி­ட­மி­ருந்து கிடைக்கும் நிதி உதவி போல் பொக்­கோ­ஹ­ர­மிற்கோ அல்­லது அல்-ஷபா­பிற்கோ கிடைப்­ப­தில்லை.

இதனால் பொக்­கோ­ஹரம் ஐ.எஸ்­ஸிற்கும் அல்–ஷபாப் அல்–கைதா­விற்கும் தமது கரங்­களை நீட்டிக் கொண்­டன.

வளரும் ஐ. எஸ்.ஸும் தேயும் அல்–கைதாவும்

அல்–கைதா அமைப்புத் தேய்ந்து கொண்டும் ஐ.எஸ்.அமைப்பு வளர்ந்து கொண்­டு­மி­ருக்கும் நிலையில் அல்–ஷபாப் அமைப்பு ஐ. எஸ். உடன் இணைந்து செயற்­பட வேண்டும் என்ற கருத்து அல்–ஷபாப் அமைப்பினரிடையே வலுத்து வரு­கின்­றது.

அமெ­ரிக்க உளவுத் துறை­யினர் அல்–கைதா­விற்கு எதி­ராக பல நட­வ­டிக்­கை­களை எடுத்து அதன் தொடர்­பா­டல்­களை முடக்­கி­யி­ருக்­கையில் ஐ. எஸ். அமைப்பு உல­கெங்கும் தனது கிளை­களை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்றது.

ஆனால், ஏற்­க­னவே அல்-–கைதா­வுடன் இணைந்து கொள்­வ­தாக உறுதி மொழி எடுத்த அல்–ஷபாப் அந்த மத ரீதி­யான உறுதி மொழியை மீற முடி­யா­த­தாக இருக்­கின்­றது. ஆனால் பொக்­கோ­ஹரம் அந்த மாதி­ரி­யான உறுதி மொழி எதையும் அல்–கைதா­விற்குச் செய்­ய­வில்லை.

அல் -ஷபாபின் அர­சியல் பிரி­வினர் அல்–கைதா­விடம் அதிக பாசமும் அல்-ஷபாபின் படைப் பிரி­வினர் ஐ. எஸ்.ஸிடம் அதிக நாட்­டமும் வைத்­தி­ருக்­கின்­றனர்.

அல்–ஷபாபின் உறுப்­பி­ன­ரான கென்­யா வைச் சேர்ந்த இஸ்­லா­மிய மத போத­க­ரான அபூ சல்மான் என அறி­யப்­படும் ஷேக் ஹஷன் ஹுசெய்ன் ஐ.எஸ். அமைப்­பி­ன­ருடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு மத ரீதியான தடை கள் ஏதும் இல்லை என்றார்.

பிளவு பட்ட அல்–கைதா

ஈராக்­கிற்­கான அல்–கைதா­வாக இருந்­த­வர் கள் தலைமைப் பீடத்­துடன் முரண்­பட்டுக் கொண்டு தமது பெயரை ஈராக்­கிற்கும் சிரி­யா ­விற்­கு­மான இஸ்­லா­மிய அரசு எனப் 2014ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் பெயர் மாற்றிக் கொண்­டனர்.

அல்–கைதா அமைப்பு மேற்கு ஐரோப்­பிய நாடு­க­ளுக்கும் வட அமெ­ரிக்கா நாடு­க­ளுக்கும் எதி­ரா­ன­தாக உள்­ளது. ஆனால் ஐ.எஸ். அமைப்பு ஷியா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­வதில் அதிக முனைப்புக் காட்­டு­கின்­றது.

அமெ­ரிக்கா அடக்கப்பட்ட பின்­னரே ஓர் இஸ்­லா­மிய அரசு உரு­வாக்கப் படலாம் என்பது அல்–கைதாவின் கொள்கை. ஆனால் ஐ.எஸ். அமைப்பு 2014ஆம் ஆண்டு இஸ்­லா­மிய அரசைப் பிரகடனப்படுத்தி விட்டது.

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

ஆப்கானிஸ்தானில் செயற்படும் தலிபான், பாகிஸ்தானிய உளவுத் துறையுடன் இணைந்து செயற்படும் ஹக்கானி வலையமைப்பு மற்றும் இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சி மீள் நிலை நிறுத்தப்படவேண்டும் என்ற கொள்கையுடைய லக்சர் -இ – தொய்பா ஆகியவை நெருக்கமாக உள்ளன.

சிரியாவில் இருந்து செயற்படும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பு அல்–கைதாவின் ஒரு கிளை அமைப்பாகும். இது ஐ.எஸ். அமைப் புடன் அடிக்கடி மோதிக் கொள்வதுண்டு.

ஆனால் இஸ்ரேலுக்கு எதிராகவோ அல்லது பலஸ்தீனியப் போராளிகளுக்கு ஆதரவாகவோ இந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் காட்டும் அக்கறை போதாது என்ற குறையும் உண்டு.

அல்–கைதா அமைப்பு தனது போக்கை விரைவில் தனது நிதிவளம் படை வலு மற்றும் தாக்குதல்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அல்லது அல்–ஷபாப் போன்ற இணையமைப்புகள் திசை மாறலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version