இலங்கைத் தழிர்களை வழி நடத்திச் செல்கின்ற அரசியல் தலைவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது  அவர்களுக்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது.

தமிழ் ஈழம் என்பார்கள், சமஸ்டி என்பார்கள், சுயாட்சி என்பார்கள், மாகாணசபை, 13வது திருத்தச் சட்டம்  என எந்தக் காலத்தில் என்ன ‘பொருள் விலை”  என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தென்  இலங்கையில் அமையும் ஆட்சியைப் பொறுத்து வியாபார  உத்திகளை மாற்றிக் கொள்வார்கள். மாகாணசபையை ஏற்றுக் கொள்ளமாட்டோம் எனக் கூறி  மாகாணசபை தேர்தலை பல தடவை புறக்கணித்தார்கள்.

பின்னர் கடைசியாக நடைபெற்ற மாகாணசபை  தேர்தலில் போட்டியிட்டார்கள். யாழ்ப்பாணத் தமிழர்களின்  விருப்பத்தை நன்கு அறிந்தவர்கள் தமிழரசுக் கட்சியினர்.

யாழ்ப்பாணத்தானுக்கு தலைவனாக வாறதெண்டால்  படிச்சவனா இருக்கவேணும். இந்து மத பற்றாளனாக இருக்க வேணும். வெள்ளாளனாகவும் இருக்க  வேணும். இந்த மூன்று தகைமைகளும் உள்ளவர்தான்  இன்றைய வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

அதற்காக அவர் மக்கள் மீது பற்றுள்ளவராக  இருக்க வேண்டும் என்பதில்லை. குறைந்த பட்சம்  ஒரு சனசமூக நிலையத்தை நிர்வகிக்கும் தகைமை இருக்க வேண்டுமென்பதுமில்லை.

இந்த ஆன்மீகத்  தலைவர் இப்போது தமிழர்களுக்காக செய்யும் முக்கிய  பணி என்னவெனில் தனது வீட்டில் இருந்து நடத்திய  ஆசிரமத்தை அரச பணத்தில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு  வந்து விட்டார்.

nith-1இனிமேல் நித்தியானந்தா காட்சிகளைப்  போன்று பல காட்சிகளை யாழ்ப்பாண மக்கள் பார்த்து  இரசிக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் கல்லெறிந்தால் விழுகின்ற இடமெல்லாம்  வீடுகள் இருக்கோ இல்லையோ கோவில்கள்தான்
பெருகிக் கிடக்கிறது கல் விழும் இடங்களாக.

ஊருக்கு ஒரு கோவில். வீதிக்கு ஒரு கோவில், ஒழுங்கைக்கு  ஒரு கோவில், முக்கியமாக சாதிக்கு ஒரு கோவில் என  குவிந்து கிடக்கும் கோவில்கள் போதாது என மாகாண  முதல்வர் விக்கினேஸ்வரன் ஆசிரமத்தை அமைத்து  பஜனை பாடப்போகிறார்.

ஆத்தா படுகிற பாட்டுக்குள்ள  குத்தியன் என்னத்துக்கோ அழுதானாம்.

நல்லூரில் பிறந்து சைவத்தையும், தமிழையும் வளர்த்த  ஆறுமுகநாவலர் அவர்களே தமிழ் தேசியத்திற்கும்  பிதாமகனாகும்.

ஆறுமுகநாவலர் தொடக்கி வைத்த சாதிய தமிழ் தேசியத்தையே இன்றைய தமிழ்தேசியக்  கூட்டமைப்பும் தமது கோட்பாடாக வகுத்துக் கொண்டு  செயல்படுகின்றது.

இந்த சைவ சித்தாந்த மன  நிலையோடு தமிழர் உரிமை கேட்டு போராடுவது  நடைமுறைக்கு முரணானது மட்டுமன்றி அறம் சார்ந்ததும் ஆகாது.

நாம் எல்லோரும் இலங்கையில்தான்  வாழ்வோம் என குறைந்த பட்சமாகவேனும் தேசப்பற்று  இக்குமேயானால் அவர்களது அரசியல் நகர்வு அந்த  மக்கள் நலன் சார்ந்ததாகவும், நடைமுறை சாந்ததாகவும்
இருக்கும்.

சிங்கள அரசு ஒரு வெடியை கொழுத்தி போட்டாலும் நாம் உலகத்தின் பல பகுதிகளிலும்  குறிப்பாக பணம் படைத்த நாடுகளில் சென்று வாழ  தகுதி உடையவர்கள் எனும் மனநிலையில் இருந்து  கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை  எடுக்கிறது.

ஆனால் சர்வதேச அரசியலில் மட்டும் மிகவும்  ஆணித்தரமான கொள்கையோடு செயலாற்றி வருகின்றது.  ‘எந்த சிங்களவன்’ எந்தக் கொலை பாதகம் செய்தாலும்  செய்தவன் அமெரிக்க ஆதரவாளனாக இருந்தால்  அவனை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இந்த கோட்பாட்டை  ஏற்றுக்கொள்வோர் மட்டுமே கூட்டமைப்பில் இணைய  முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தின்  இறுதிவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்த  மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்ததன் ஊடாகவும்  அவர்களது சர்வதேச அரசியல் கொள்கையை (மேற்குலக  விசுவாசத்தை) நாம் அறிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் தமிழ் மகா நடிகர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடித்து அரங்கேற்றுவதுதான் தமிழர் கூட்டமைப்பு  எனும் அரசியல் நாடகம். சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் அரசை எதிர்ப்பது போலவும், சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்தது போலவும் இரண்டு பக்க காட்சிகளாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்த அரங்கத்துள் வேறு எவரும் நுழைந்து விடாத வகையிலும், மக்கள் வாக்குகளை பாதுகாக்கும் வகையிலுமான ஒரு திட்டமிட்ட செயலாகவே அரச எதிர்ப்பு-ஆதரவு காட்சிகளையும் அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களுள் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன்  அவர்களது அரசியல் என்பது பிற்போக்கான இனவாத அரசியல். ஹெல உறுமய, சிவசேன போன்ற பௌத்த, இந்துத்துவ இனவாத கட்சிகளையே மிஞ்சும் வகையில்
அவரது செயல்பாடுகள் அமைந்து வருகிறது.

முஸ்லிம், சிங்கள மக்கள் மீதான வெறுப்பை வெளிப்படையாகவே பேசிவருகிறார். கனடாவிலுள்ள புகலிட தமிழ் தேசிய  ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது தான் முஸ்லிம்  இனத்தவரை வெறுப்பதாகவும், யூத இனத்தவரை  ஆதாயங்களும் கிடைத்திடவில்லை.

மாறாக ஈடு செய்ய  முடியாதவகையில் அழிவுகளையும் நாசத்தையுமே ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ந்தும் மக்கள் அழிவுகளுக்கான  முன்னெடுப்புகளையே மேற்கொண்டும் வருகிறார்கள்.

இவர்களது சாகச அரசியலில் சிக்குண்டு சிதைந்து போகின்ற மக்கள் அடித்தட்டு மக்களே. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான தலைமைகளை இவர்களது  இனவாத தமிழ் தேசியம் அழித்தொழித்ததுடன் அந்த  மக்கள் சிறுக, சிறுக சேமித்த அனைத்து வளங்களும்  அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழ்தேசிய  வாதிகளிடம் சாதிய ஒடுக்குமுறைக்கும், தீண்டாமை பாகுபாட்டிற்கும் எதிராக முன்வைக்கக்கூடிய எந்த  வேலைத்திட்டமும் இருந்ததில்லை.

ஆறுமுகநாவலர்  விதைத்த நச்சு விதையே வேரூண்றி சடைத்த ஒரு மரமாக தமிழ்தேசியமும், அதனது கிளையாக தமிழர் கூட்டமைப்பும் வளர்ந்து வருகிறது.

அந்த மரம் வீசுகின்ற சுவாசமே தமிழ் பேசும் மக்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது

Share.
Leave A Reply

Exit mobile version