வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தது தமிழ் மக்களின் காதில் பூ சுற்றும் வேலை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக குருநாகல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா இங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த முறையும் ஒரு பேரம் பேசுதல் நடைபெற்றுள்ளது. அந்த பேரத்தின் விபரம் தனக்கு தெரியாதென்றும், ஏனெனில், வெற்றிலையை தான் சப்பி துப்பி விட்டதாகவும், அதன் பின்னர் தான் வீணையில் இருப்பதாகவும் கூறினார்.

மகிந்தவை பிரதமராக நியமிக்காவிடின் செங்கோலைக் கைப்பற்றுவோம் – எச்சரிக்கிறது மகிந்த அணி !! (கே.சிவாஜிலிங்கம்  சொன்ன யோசனையாம்)

mace-300x199

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்கா விட்டால், செங்கோலைத் தூக்கிக் கொண்டு, தாம் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்க.
குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும், சாலிந்த திசநாயக்க இன்று பொல்பிட்டிகமவில் நடந்த தேர்த்ல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சாலிந்த திசநாயக்க,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று, மகிந்த ராஜகபக்சவை பிரதமராக நியமிக்காது போனால், எமது குழுவினர் செங்கோலுடன் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version