கனடாவில் நிகழ்ந்த சீக்கிய மத திருமண ஊர்வலத்தின்போது தன் மீது அமர்ந்த மணமகனை குதிரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Surrey நகரில் சில தினங்களுக்கு முன்னர் சீக்கிய மத கோவிலில் திருமணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சீக்கிய மத சம்பிரதாயப்படி மணமகனை குதிரை மீது அமர்த்தி ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். இதேபோல், பெண் குதிரை ஒன்று ஊர்வலத்தின்போது வரவழைக்கப்பட்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு அலங்கரிக்கப்பட்டு மணமகன் கோலத்தில் வந்த அந்த நபர், குதிரை மீது ஏறி அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த அடுத்த வினாடி, குதிரை திணறிக்கொண்டு அதே இடத்திலேயே வேகமாக வட்டமடித்துள்ளது.

குதிரையின் உரிமையாளரும் ஏதோ கத்திக்கொண்டு குதிரையை அடக்க முயற்சி செய்கிறார். சிறிது நேரத்தில் குதிரை அடங்கி நிற்கிறது.

ஆனால், யாரும் எதிர்பாராத அடுத்த விநாடியே அந்த குதிரை மணமகனை சுமந்துக்கொண்டு தறிக்கெட்டு ஓடுகிறது.

சிறிது தூரம் சென்றதும் தன் முதுகில் அமர்ந்திருந்த மணமகனை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்கிறது.

இந்த காட்சியை கண்ட உறவினர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு மணமகனை தூக்க செல்கின்றனர்.

ஆனால், மணமகன் அங்கிருந்த புல்வெளியில் விழுந்ததால் பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக குதிரையின் உரிமையாளர் பேசும்போது, மணமகன் குதிரை மீது ஏறுவதற்கு முன்னரே அவர் அணிந்திருந்த காலணி மற்றும் வாள் ஆகியவற்றை கழட்டுமாறு கூறியிருந்தேன்.

ஆனால், அவர் அவற்றை கழட்டாமல் குதிரை மீது ஏறியதால் அவருடைய காலனி அல்லது வாள் குதிரையின் வயிற்றில் குத்தியிருக்க வேண்டும். அதனால் தான் குதிரை மணமகனை கீழே தள்ளிவிட்டு சென்றது என்றார்.

இது ஒரு துயர சம்பவமாக இருந்தபோதிலும், திருமண நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை மணமக்கள் இருவரும் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் என உறவினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version