திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஷில்பா சாவில் திடீர் திருப்பமாக, தலைமறைவாக இருந்த அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
சினிமா நடிகை

திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டை சேர்ந்தவர் ஷாஜி. இவருடைய மகள் ஷில்பா (வயது 19) பிளஸ்–2 படித்துள்ள இவர் தமிழ், மலையாள சினிமா மற்றும் கேரள டி.வி தொடர்களில் நடித்து வந்தார்.

‘சந்தன மழை’ உள்பட பல தொடர்களில் நடித்துள்ள ஷில்பா தனியார் டி.வி. நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

பாலராமபுரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அடிக்கடி வெளியே சென்று வருவது வழக்கம்.

காதலனுடன் சென்றவர்

கடந்த 17–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அந்த பகுதியை சேர்ந்த பெண்ணுடன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது ஷில்பாவின் காதலன் என்று கூறப்படுபவரும், அவருடைய சொந்த போட்டோகிராபருமான லிஜின் என்ற வாலிபரும் உடன் சென்றதாக தெரிகிறது.

பின்னர் ஷில்பா வீட்டிற்கு திரும்பவில்லை. மகள் வீட்டிற்கு வர தாமதமானதை தொடர்ந்து ஷில்பாவுக்கு அவருடைய பெற்றோர் போன் செய்தனர்.

ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்தது. உடனடியாக ஷில்பாவை அழைத்து சென்ற பெண்ணிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஷில்பா தன்னுடன் தகராறு செய்து விட்டு தனியாக சென்று விட்டதாகவும், அவர் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது, என்றும் கூறிவிட்டார்.

மர்மச்சாவு

இந்த நிலையில் மறுநாள் நடிகை ஷில்பா திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மருதூர் கடவு பாலம் அருகே பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கரமனை போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், எனவும் போலீசில் அவருடைய பெற்றோர் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் காதலன் லிஜின் தலைமறைவானது தெரிய வந்தது.

தனிப்படை விசாரணை

ஷில்பாவின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தவும், தலைமறைவான காதலன் லிஜின் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்கவும் திருவனந்தபுரம் போர்ட் போலீஸ் துணை கமிஷனர் சுதாகரன் பிள்ளை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

முன்னதாக ஷில்பாவின் மர்மச்சாவு குறித்து, அவரின் நெருங்கிய தோழிகள் மற்றும் திரைப்படம், டி.வி. தொடர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஷில்பா மாயமான தினத்தில் அவருடன் சென்றவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்தனர்.

நடிகை ஷில்பாவின் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக நேற்று காலை காட்டாக்கடையில் நண்பர்களுடன் ஒரு பெட்ரோல் பங்கில் நின்று கொண்டு இருந்த லிஜினை போலீசார் கைது செய்தனர்.

நடிகை ஷில்பா சாவு குறித்து லிஜினிடம் தம்பானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் ஷில்பாவின் சாவுக்கு காரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

ஆற்றில் பிணமாக மிதந்த கேரள நடிகை ஷில்பா – சுற்றிச் சுழலும் மர்மங்கள்; பெற்றோர் புகார்
Tamil_News_large_1302101திருவனந்தபுரம்: கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் கரமனை ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மகள் ஷில்பா. பிளஸ் 2 முடித்துள்ள ஷில்பா பிரபல மலையாள டைரக்டர் பாலசந்திரமேனன் படத்தில் நடித்தார்.
அதன் பிறகு இவருக்கு மலையாளத் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தன மழா, பிரணயம், சவுபாக்கியவதி ஆகிய தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமான ஷில்பா தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இதற்காக அவரை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வார். கடந்த சனிக்கிழமையும் பாலராமபுரம் பகுதியில் நடந்த விழாவில் பங்கேற்க அந்த பெண், நடிகை ஷில்பாவை அழைத்துச் சென்றார்.
அன்று மாலை ஷில்பாவின் பெற்றோர் அவரை தொடர்பு கொண்டபோது, ஷில்பாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. எனவே அவர்கள் ஷில்பாவை அழைத்துச் சென்ற பெண்ணை தொடர்பு கொண்டனர்.
அந்தப் பெண்ணோ சம்பவத்தன்று மாலையிலேயே ஷில்பா தன்னுடன் தகராறு செய்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக கூறினார்.
இதைக் கேட்டு பதறிப்போன பெற்றோர் ஷில்பாவை தேடி அங்குமிங்கும் அலைந்தனர். அப்போதுதான் ஷில்பா கரமனை ஆற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் போலீசாருடன் அங்கு சென்று பிணத்தை மீட்டனர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களிடம் ஷில்பாவின் பெற்றோர், ஷில்பாவை அழைத்துச் சென்ற மர்ம பெண் குறித்தும் தெரிவித்தனர். ஷில்பாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரை அழைத்துச் சென்றவர்கள்தான் ஷில்பாவை கொன்று பிணத்தை ஆற்றில் வீசிச் சென்றிருக்க வேண்டும் என குற்றம் சாட்டினர்.
ஷில்பாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகே இதற்கு விடை கிடைக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்மமாக இறந்த நடிகை ஷில்பா தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிறகுகள் என்ற படத்திலும் அவர் நடித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply

Exit mobile version