அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
அர்ஜெண்டினா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற உறுப்பினரான Victoria Donda Perez என்பவர், அங்கு வைத்து தனது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.
இவர் பாலூட்டிய புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது, பசியால் அழுத குழந்தைக்கு பாலூட்டுவது தவறில்லை, ஆனால் பார்க்கும்போது சுற்றியிருப்பவர்கள் சங்கடமான நிலைக்கு ஆளாவார்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து Juana என்ற பெண்மணி தனது டுவிட்டரில், பெரும்பாலான தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பாலர் பாடசாலையில் விட்டு செல்கின்றனர், ஆனால் இவரின் செயல் பாராட்டக்கூடியது என்று கூறியுள்ளார்.
அதற்கு, Zuzanne என்பவர், நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் குழந்தைக்கு பாலூட்டும்போது தனது மார்பகங்களை மறைத்திருக்கலாம், ஏனெனில் சுற்றியிருப்பவர்களின் பார்வை மார்பகங்களின் மேல் பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
கவர்ச்சிகரமான பெண் உறுப்பினர் என்ற பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரினச்சேர்க்கையாளருடன் விளம்பரத்தில் நடித்த ஜேர்மனி அதிபர்? பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள்
ஜேர்மனியில் நேற்று புதிதாக Straight என்ற வாரப்பத்திரிகை வெளியாகியுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவான இந்த பத்திரிகையின் விளம்பரத்திற்கு சர்ச்சைக்குரிய விளம்பர வீடியோ ஒன்றை டுவிட்டர் சமூகத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
23 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அசல் ஜேர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கெல் போன்ற பெண் உருவம் ஒரு அறையில் உள்ள சன்னல் அருகே நின்றுள்ளது.
அந்த உருவத்தின் பின்னணியில் உள்ள வானொலியில் ‘ஜேர்மனியில் 62 சதவிகித மக்கள் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவு தருகின்றனர்’ என்ற செய்தியை ஒலிபரப்புகிறது.
இந்த செய்தியை ஏற்றுக்கொள்வது போல் ஏஞ்சலா மெர்க்கெல் தலையை அசைக்கிறார்.
சில விநாடிகளுக்கு பின்னர், அந்த அறையின் கதவை திறந்துக்கொண்டு வெள்ளை நிற ஆடையில் ஒரு பெண் நுழைந்து ஏஞ்சலா மெர்க்கெலை பின்புறமாக இருந்து கட்டிப்பிடிக்கிறார்.
அந்த பெண்ணின் அனைப்பை ஏற்ற ஏஞ்சலா மெர்க்கெல், மெலிதாக பின்புறம் சாய்ந்து அந்த பெண்ணிடமிருந்து ஒரு முத்தத்தை பெறுகிறார்.
வீடியோ இத்துடன் முடிவடைகிறது. ஆனால், இந்த வீடியோ மூலம் மக்களுக்கு அந்த பத்திரிகை சொல்ல வரும் கருத்து என்ன?
ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு உள்ள சட்ட திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டன.
ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏஞ்சலா மெர்க்கெல் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே அந்த வீடியோ காட்சிகள் விளக்கியுள்ளன.
இந்த விளம்பரம் தொடர்பாக அதிபர் மாளிகை எந்த பதிலும் இதுவரை அளிக்காத நிலையில், இணையத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோ அந்நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.