இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர். இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இந்த துப்பாக்கிதாக்குதல் நடந்துள்ளது.

குருதாஸ்பூர் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த காவல்நிலையத்தை இந்திய பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு இந்திய இராணுவத்தின் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பிரதேசத்தில் தீவிரமான துப்பாக்கிச்சுடும் சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

27Punjab-terror-attackசம்பவ இடத்துக்கு இந்திய இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்

இந்திய பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

துப்பாக்கிதாரிகள் இராணுவ சீருடை அணிந்து வந்ததாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஒரு பேருந்தை கடத்தியதாகவும் குருதாஸ்பூரில் இருக்கும் பேருந்து நிலையத்தையும் அவர்கள் தாக்கியதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது அமைச்சரவை சகாக்களோடும் பாதுகாப்பு அதிகாரிகளோடும் தலைநகர் புது தில்லியில் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்திய பாகிஸ்தான் எல்லையையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும்படி இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version