பிரான்ஸின் காலெயிஸ் பிராந்தியத்திலுள்ள அந்நாட்டையும் பிரித்தானியாவையும் இணைக்கும் சுரங்கப் பாதையினுள் சுமார் 1,500க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் பிரவேசிக்க முயற்சித்த வேளை குறைந்தது ஒருவர் சொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நெருக்கடியைத் தடுப்பதற்கு தனது அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன் உறுதியளித்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சுரங்கப் பாதையில் புதிய வேலியொன்றை அமைப்பதற்கு 7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நிதி வழங்கப்படுவதாக பிரித்தானியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சுரங்கப் பாதையில் உயிரிழந்த நபர் 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய சூடானியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் டிரக் வண்டியொன்றால் நசுங்குண்டு உயிரிழந்துள்ளார். இந்தக் கோடை காலத்தில் அந்த சுரங்கப் பாதைக்குள் பிரவேசிக்கும் முயற்சியில் உயிரிழந்த ஒன்பதாவது நபராக மேற்படி நபர் விளங்குகிறார்.