முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகனின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவர்களின் மரண தண்டனையை இரத்து செய்து வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மேற்கண்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதிபேரறிவாளன் உட்பட 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து தீர்ப்பு வழங்கியது .
நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு இத் தீர்ப்பினை வழங்கியிருந்தனர்.
அதாவது ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை இரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி தள்ளுபடி செய்தது. நீதிபதி சதாசிவம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்திய அரசு 2014 ஆம்ஆண்டு மே மாதம் மனு தாக்கல் செய்தது.
இவ் வழக்கை நேற்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் திருத்தம் கோரும் மத்திய அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்தது.