காத்மண்டு : நிலநடுக்கம் உருக்குலைத்த நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர்.

மேலும் ஏராளமானோர் மாயமானதால், பலி எண்ணிக் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பிரம்மாண்ட கட்டடங்களும் தரைமட்டமாகி சுமார் 7 ஆயிரத்திக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 அதன் சோக வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், காத்மண்டு நகரில் கடும் நிலச்சரிவில் ஏற்பட்டது.

நள்ளிரவில் பெய்த கடும் மழை இரண்டு கிராமங்களை அழித்துவிட்டது. இதனால் காத்மாண்டுவின் மேற்கே 127 கி.மீ. தொலைவில் உள்ள போக்காரா உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழையின் தொடர்ச்சியாக நேற்று (29-07-2015) நள்ளிரவில் அங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சுமார் 30 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலரைக் காணவில்லை.

இதில் 22 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லஷ்மி தக்கல் தெரிவித்தார். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும் பருவம் என்பதால் அங்கே கடும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்களும், போலீசாரும் புதையுண்ட மக்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மீட்புப் பணிகளில் நேபாள அரசு மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version