சித்தார்த் உடன் நடிக்க மாட்டேன் என்று கூறி ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா மீண்டும் அதே படத்தில் நித்யா மேனன் நடித்த வேடத்தில் நடிக்க சம்மதம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படங்களான 36 வயதினிலே, பாபநாசம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மலையாளத்தில் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ தமிழில் ரீமேக் ஆகிறது.

நஸ்ரியா, துல்கர் சல்மான், பகத் பாசில் மற்றும் நிவின் பவுலி என்று ஸ்டார் நட்சத்திரங்களின் நடிப்பில் மலையாளத்தில் ஹிட் அடித்தது.

ஆர்யா-ஸ்ரீதிவ்யா

தமிழில் நஸ்ரியா கதாப்பாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா மற்றும் ராணா, ஆர்யா மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் படமாக்கப்பட்டுவருகிறது. நட்சத்திர படங்களே களமிறங்கும் இந்தப்படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

30-1438252741-siddarth-samantha-121-600

சித்தார்த் – சமந்தா ஜோடி
முதலில் ‘பெங்களூர் டேஸ்’ தமிழ் ரீமேக்கில் சித்தார்த், சமந்தா நடிப்பதாக இருந்தது. அப்போது இவருவரும் காதலித்து வந்தனர். திடீரென்று அவர்களுக்குள் பிரேக் அப் ஆனதையடுத்து படத்திலிருந்து சமந்தா வெளியேறினார்.
என்னதான் சண்டையோ?
சமந்தா வெளியேறியதை அடுத்து படத்தில் இருந்து சித்தார்த்தும் வெளியேறினார். தற்போது வேறு ஹீரோ நடிப்பதால் சமந்தா நடிக்க சம்மதித்திருக்கிறார்.
நித்யா மேனன் மறுப்பு
மலையாளத்தில் இந்த வேடத்தை செய்த நித்யா மேனனை தமிழிலும் நடிக்க கேட்டார்களாம், ஆனால் தமிழில் தனக்கென ஒரு இடம் கிடைத்து விட்டதாக நித்யா மேனன், மலையாளத்தில் நடித்த வேடத்தையே மீண்டும் நடிக்க விருப்பமில்லை’ என்று மறுத்துவிட்டாராம் எனவேதான் சமந்தாவை நடிக்க அணுகினார்களாம். சமந்தாவும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படப்பிடிப்பில் பங்கேற்பார்
மந்தா நடிக்க சம்மதம் சொன்னது உண்மைதான் விரைவில் அவருக்கான பகுதியில் நடிக்க வருவார் என்று படக்குழுவினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
Share.
Leave A Reply

Exit mobile version