அமெரிக்காவில் சாலையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரவு வேளையில் ஊர் சுற்றுபவர்களும் குடித்துவிட்டு செல்பவர்களும் சாலையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர்.

இவர்களின் இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வந்தது. எனவே இதை தடுக்க தற்போது புதுமையான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

public_pee_001அதன்படி சான் பிரான்ஸிகோவின் சாலைகளில் உள்ள சுவர்களில் நானோ டெக்னாலஜி மூலம் புது வித பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி யாராவது அந்த பெயிண்ட் பூசப்பட்டுள்ள சுவரின் மீது சிறுநீர் கழித்தால் அல்லது மற்ற திரவங்களை தெளித்தால் நம் மீதே அதை திருப்பி பாய்ச்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும் சாலையில் அதிகளவு கழிப்பறைகளை கட்டுவதே இதற்கு நிரந்திர முடிவு என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த திட்டம் ஜேர்மனியின் செயிண்ட் பாவுலி நகரில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version