நிரந்தர அரசியல் தீர்வு…!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் வேதமந்திரம்…! ஆம், ஆறு தசாப்தங்களாக இலங்கைத் தீவில் புரை-யோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர தீர்வு பெறுவதற்கு வடகிழக்கில் 20ஆசனங்களே எமது இலக்கு என அறிவித்திருக்கின்றார் சிரேஷ்ட அரசியல்வாதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
அத்துடன் பிரதான கட்சிகளும் அரசியல் தீர்வு குறித்து தமது நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தியிருந்தார்.
13ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசி-யக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிவருகின்றது.
அந்நிலையில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்திருக்கின்றன.
அந்த விஞ்ஞா-பனங்கள் தமிழர்கள் விரும்பி-யும் விரும்பாவிட்டாலும் உரிமைப் போராட்டமே அவர்களது வாழ்க்கை-யாகவும் வாழ்க்கையே அவர்களது போராட்டமாகவும தொடரவேண்டும் என்ற கருத்தியலை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன.
அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது உரிமை-ப்போராட்டம் உலகின் சிகரத்தை எட்டி-யிருக்கின்றது என்பது தமிழ் விடுதலைப் புரட்சியாளன் ஒருவரின் கருத்து. ஆனால் நிரந்தர அரசியல் தீர்வு என்பது எட்டாக்க-னியாகப்போகின்றதே என்பதே தமிழ் மக்களின் இன்றைய மன-நிலை. ஆதற்கு காரண-மில்லா-ம-லில்லை.
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஐந்து அம்சங்களை உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்திருந்தது.
அதில் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்ட முடியும் என அன்றுமுதல் இன்றுவரையில் பெரும்பான்மையின் மனங்கோணாது சத்தியவாக்கான கூற்றையே மீண்டும் ஒரு தடவை உறுதிபட தெரிவித்திருக்கின்றது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பெரும்பான்மை மக்களை திருப்தி படுத்துவதன் ஊடாகவே தனது பெரும்பான்மை பலத்தை தக்கவைக்க முடியும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு என்பது வெளிப்படை.
எனினும் ஒற்றை ஆட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். நல்லாட்சிக்காக தமிழ்த் தரப்புடன் கைகோர்த்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணி இதனை நன்கறிந்தவர்கள்.
எனினும் உடும்புபிடியாய் ஒற்றையாட்சி தீர்வு திட்டத்தை முன்வைத்திருக்கின்றதென்றால் அதன் அர்த்தம் என்ன? எமது மக்களுக்காக நாம் அதியுச்ச நலன்களையே வழங்க வேண்டும்.
நாம் அதிகாரத்தில் கோலோச்சி இருக்க வேண்டும். நீங்கள் சிறுபான்மையினர் முடிந்தால் எமது நிருவாக கட்டுக்குள் இருங்கள் இல்லையென்றால் செல்லுங்கள் என்பது தானே.
அரசியலமைப்பின்13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை மேலும் பலப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றைக் காண்பதற்கு ஆறு மாதங்களில் நடவடிக்கை,
புதிய அரசாங்கம் அமைந்து ஒரு மாதத்தினுள் அதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் அனைத்துப் பிரஜைகளுக்கும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதிசெய்வதற்காக அதிகாரங்களுடன் மாவட்ட ரீதியான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும்,கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒரு வருட காலத்திற்குள் அமுல்படுத்தப்படும் என கடந்த காலங்களைப் போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு தொடர்பாக வாய் நிறைந்த வாக்குறுதிகளை தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி மகிந்தர ராஜபக்ஷ வெளியிட்டு வைத்திருக்கின்றார்.
முதலாவதாக 13ஆம் திருத்தச்சட்டம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது.
இரண்டாவதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தமிழர்கள் முற்றுமுழுதாக நிராகரித்திருந்த போதும் ஐ.நா உட்பட சர்வதேசம் அதனை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த காலங்களில் வாய்ப்புக்களை வழங்கியிருந்தன.
மூன்றாவதாக தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான பொறிமுறை இதுவே நாட்டிற்கு மிகவும் அவசியமானதென்று. இவ்வாறான நிலையில் மிக சூட்சுமமாக அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்விஞ்ஞாபனத்தின் உண்மையான பின்னணி குறித்து ஆராய வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.
ராஜபக்ஷவின் இராஜதந்திரம்
யுத்த வெற்றி மமதை, ஊழல், மோசடி, குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம் என தளத்திலிருந்து கொண்டு நிரந்தரமாக நாட்டின் மன்னராவதற்கு முயற்சித்த மகிந்த ராஜபக்ஷவுக்கு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் தீர்ப்பளித்தனர்.
ஆட்சிப்பீடத்திலிருந்து அம்பாந்தோட்டைக்கு அனுப்பினர். இருப்பினும் அதிகார மோகமும் குடும்பத்தை பாதுகாக்க வேண்டி கட்டாய தேவையும் ஏற்பட்டது.
அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு எந்தவகையிலோ மீள்அரசியல் பிரவேசமும் அத்தியவசியமானது. அத்துடன் இனவாதச் சாயத்தால் ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு மீண்டும் தேர்தல்வெற்றியொன்றை பெற்றுக்கொள்வதற்காக இனவாத்திற்கு தீணிபோடும் மகிந்த ராஜபக்ஷவின் மீள்வருகை தேவையாகயிருந்தது.
இந்த பின்னணியுடன் மீண்டும் குருநாகல் மாவட்டத்தில் சாதாரண பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ. அவரை பிரதமராக்க வேண்டும் என்றும் சில அதிவிசுவாசிகள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றார்கள்.
அது அவ்வாறிருக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் தலைமைதாங்கிய மகிந்த ராஜபக்ஷ அவரே அதனை வெளியிட்டும் வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்த விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட அரசியல் தீர்வு குறித்த விடயத்தை ஆழமாக கருத்திற்கொண்டால் நான்கரை தசாப்த அரசியல் அனுபமிக்க மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கும் ராஜதந்திரமாக சில விடயங்கள் புலனாகின்றன.
முதலாவதாக 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வு என்பதை பிரதானப்படுத்தியுள்ளார்.
2009ஆண்டு யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னதாகவே 2005ஆம் ஆண்டு 13பிளஸை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதித் தேர்தலில் களமிங்கி வெற்றி பெற்றிருந்தார்.
அதனைத் காங்கிரஸின் தலைமையிலிருந்த இந்திய மத்திய அரசாங்கத்திடமும் மேற்குலக நாடுகளிலும் 13பிளஸின் தீர்வு வழங்குவேன் என கூறிவந்தார்.
2009இல் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவந்தவுடன் ஒரு இனத்தின் இராச்சியத்தையே வெற்றி கொண்டுவிட்-டேன் என்ற விடயம் கண்ணை மறை-த்தது. 13பிளஸ் மறுக்கப்பட்டது. ஆனாலும் பகட்டுக்காக 13பிளஸ் கதைகள் தொடர்ந்தவண்ணமிருந்தன.
தொடர்ந்து 2010இல் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆட்சிப்பீடம் கிட்டியது. ஒருங்கே சீனாவின் நட்பும் கிடைத்துக்கொள்ள ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றுவேன் என்ற புனைகதையுடன் நிரந்தரமாக நட்டின் தலைமையை வகிக்க வேண்டுமென்ற கனவை நனவாக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன.
அதன் ஒரு அங்கமாக 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை தேர்தல் நடைபெற்று வடமாணாசபை உருவாக்கப்பட்ட போதும் 13ஆவது திருத்தத்தின் அதியுச்ச அதிகாரங்களான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு மறுத்து வடக்கு மாகாண சபையை நலிவுற்றிநிலையில் இருப்பதையே விரும்பினார்.
அது மட்டுமன்றி 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் காணப்பட்ட மாகாண சபை நிருவாக் கட்டமைப்பை திட்டமிட்டு சிதைப்பதற்காக திவிநெகும என்ற சட்டமூலம் உருவாக்கப்பட்டு பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டு அதிகாரம் உச்சத்திலிருந்தமையால் வெற்றியையும் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னிலைப்படுத்திய இந்த மகிந்த ராஜபக்ஷ அதாவது மிகமிக குறைந்த அதிகாரங்களை உள்ளடக்கியதான 13ஆவது திருத்தத்தில் உள்ளவற்றையே தமிழ் மக்கள் அனுபவிக்க கூடாது என்ற கருநிலையைக் கொண்டிருந்தவர் தற்போது எவ்வாறு 13ஆம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தீர்வை வழங்குவார் என்பது கேள்விக்குறி.
13ஆவது திருத்தச்சட்டத்தை இவர் கையில் எடுத்திருப்பதற்கு காரணமில்லாமில்லை. சீனாவின் நெருக்கம் அதிகரித்துக் கணப்பட்டாலும் கண்டுகொள்ளாதிருந்த இந்தியா ஆட்சி மாற்றத்திற்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன நீர்மூழ்கி கப்பலின் வருகையால் சீற்றமடைந்தது.
அதன் தொடர்ச்சியாக சீன ஜனாதிபதியின் வருகையும் துறைமுக நகரம் அபிவித்தி செயற்திட்ட அங்குராட்பணமும் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் மகிந்த ராஜபக்ஷ மீதான வெறுப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிந்ததுடன் இரு அரசாங்கங்களுக்கிடையிலான விரிசலையும் வலுப்படுத்தியிருந்தது.
ஆகவே தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணைபெற்றவர்கள் கூறுவது போன்று இலங்கையில் அமைதியை விரும்பும் இந்தியாவை புறம் தள்ளி எதனையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ இந்தியாவின் அரவ-ணைப்பை பெறுவதையே இலக்காக கொண்டி-ருக்கின்றார்.
இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவின் மத்தியில் கடந்த 2014 ஆண்டு 5 ஆம் மாதம் 26ஆந் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை.
மேலும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தமது நாட்டில் சமஷ்டி முறையிலான ஆட்சி இருப்பதாக உரையில் கூறியிருந்தரே தவிர இற்கு சமஷ்டி முறையிலான ஆட்சி ஏற்படவேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை. அதேநேரம் 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றே இந்தியா உறுதியாகவுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த சொற்ப நாட்களிலேயே இலங்கைக்கு விஜயம்செய்த அப்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளான எம்.கே.நாராயணன் மற்றும் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சந்தித்த போது இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார்கள்.
அதாவது தமிழர்களுக்கு;. 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம் என்பதை தெட்டத் தெளிவாகவே கூறியிருக்கின்மையானது இதற்கு வலுச்சேர்க்கின்றது.
அக்காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இன்று பாரதீஜ ஜனதாக் கட்சி மத்தியை தலைமையேற்றிருக்கின்றது என்ற வாதத்தை முன்வைத்தாலும் கூட வெளியுறவுக்கொள்கையில் நுண்ணிய அளவு கூட மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஏற்பட்ட தோல்வியானது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அடுத்து பீகாரில் இடைக்கால தேர்தலொன்று நடைபெறவுள்ளது. அதில் பா.ஜ.கா வெற்றிபெற்றே ஆகவேண்டிய நிலையிலுள்ளது. அதன் மூலமே மத்திய ஆட்சியை நிலைத்து வைத்துக்கொள்ள-முடியும்.
எனவே பா.ஜ.காவின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு தனது பிராந்திய அதிகாரத்தை வலுப்படுத்தவேண்டிய நிலையிலும் அதேநேரம் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான செயற்றிட்டங்கள் இதுவரையில் முன்னெடுக்கப்படாத நிலையில் அவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.
இந்தச் சூழமைவுகளில் இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என்பது திண்ணம்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் போன்றே பா.ஜ.க ஆட்சியாளர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங்கையின் உள்ளக விவாகரம். இறைமையுள்ள நாட்டின் உள்ளக விவகாரத்தில் தலையிட முடியாது என்றே அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.
எனவே 13ஐ எந்த ஆட்சியாளர் கையிலெடுத்தாலும் இந்தியா ஒருபோதும் மறு-க்காது என்பது யதார்த்தமானது. இந்த யதா-ர்த்தத்தை உணர்ந்தவரான மகிந்த ராஜபக்ஷ 13ஆம் திருத்தத்தை மீண்டும் ஆட்சிப்பீடமெறு-வதற்கான ஆயுதமாகவே கையில் எடுத்திருக்கின்றார் என்பது உறுதியாகின்றது.
ஐ.நாவை சமாளிக்கும் சூட்சும திட்டம்
அடுத்து இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் நெருக்கடியை சமாளிப்பதற்காக கடந்த காலத்தில் தான் ஆட்சிப்பீடத்தில் இருந்தபோது நிறுவிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒருவருடத்தில் நடைமுறைப்படுத்துவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தின் போது இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துமறே வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆகவே அதனை மீளவும் செய்வேன் என்ற உறுதிமொழியை வழங்குமிடத்து ஐ.நாவின் அழுத்தமும் அந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் அழுத்தமும் குறைவடையும் என்பதே திட்டமாகவுள்ளது.
சாத்தியமில்லாத நிலையில் இலக்கு
இவ்வாறு இரட்டைத் தலையிடியாக விரு-க்கும் இரண்டு பிரச்சினைகளுக்கு நிவா-ரணம் அளித்து விட்டால் ஆட்சிப் பீடத்தில் தன் அமருவதற்கு எதிரான வெளி-நாட்டு அழுத்தங்கள் இருக்காது என்ற நிலையில் இருக்கின்றார் மகிந்த ராஜபக்ஷ என்பதன் வெளிப்பாடே அக்கூட்ட-மைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாகவுள்ளது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு அதற்காக 20ஆசனங்கள் இலக்கு என்ற தலையணை மந்திரத்துடன் களமிங்கியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையிலான அதிகூடிய அதிகாரப்ப-கிர்வே இனப்பிரச்சினைக்கான அர-சி-யல் தீர்வின் அடிப்படையாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்-த்தேசியக் கூட்டமைப்பால் முன்மொழி-யப்பட்டுள்ளது.
இந்த சுயநிர்ணய சமஷ்டிக் கோரிக்கையை ஆட்சி-யமை-க்க வல்ல இரு பிரதான கட்சிக-ளும் முற்று முழுதாக நிராக-ரித்துள்ள நிலை-யில் அரசியல் தீர்வை நாம் எமது வரை–யறைக்குள் பெற்றுக்-கொள்ளப்-போகின்றோம் என்ற பெருவினா இங்கு தானா-கவே எழுகின்றது.
மனித ஆன்மாவின் ஆழமான அபிலா-ஷை-யாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது. அந்த தீராத்தகாத்தை தீர்த்துக்கொள்வதற்காகவே நாம் ஆறு தசாப்த காலமாக அறவழியிலும் ஆயுதவழிலும் போரடினோம்.
இன்றும் ஜனநாயக வழியில் போராடவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். ஆகவே சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்க வேண்டும்.
கடந்த காலத்-தில் அவ்வாறான செயற்பாடுகள் இருந்த-மை-யாலேயே செல்வாக்கு பெற்றவர்களாக மாறி-யிருந்தோம். இன்று நிலைமை மீண்டும் பழைய குருடி கதவை திறடி கதை-யாகவிருக்கும் நிலையில் எமது உரி-மை-களை பேரம்பேசி பெற்றுவிடடும் வியா-பாரப்பண்டமாக கருதமுடியாது.
ஆகவே இன்றுவரையில் ஒருமித்த கொள்கையில் ஒன்றுபட்ட நிற்கும் வட-கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இதுதான் என்றாகிவிட்டது என்ற நிலைப்பாட்டினை கொள்வோமானால் அதனை மறுக்கும் தரப்பிடமிருந்து அதனை எவ்வாறு பெறப்போகின்றோம் என்பதில் தெளிவற்றே இருக்கின்றோம்.
சாத்திமற்ற நிலையில் எமது இலக்கு உள்ளதா என்ற சந்தேகமும் ஒருங்கே உள்ளது. தமது உரிமைகளைப் பெற்று தமிழனம் விடுதலை பெறுவதற்கு விழிப்புணர்வு தான் முதற்படி.