போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பாக விசா­ரிக்க, உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை ஏற்­ப­டுத்த ஐ.நாவும், இலங்கை அர­சாங்­கமும் இர­க­சி­ய­மான இணக்கம் ஒன்­றுக்கு வந்­துள்­ளதா என்ற சந்­தேகம், ஊட­கங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்­வ­லர்கள் மத்­தியில் பர­வ­லாக எழுந்­தி­ருக்­கி­றது.

இறுதிப் போர்க்­கா­லத்தில் நிகழ்ந்த போர்க்­குற்­றங்­களை அம்­ப­லப்­ப­டுத்­திய, பிரித்­தா­னி­யாவின் சனல் 4 தொலைக்­காட்சி தான், இந்த இர­க­சியத் திட்டம் பற்­றிய தக­வல்­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

சனல் 4 இற்கு கிடைத்­தி­ருந்த இர­க­சிய ஆவணம் ஒன்றில், இலங்கை அர­சாங்­கத்­தினால் உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை ஐ.நாவின் தொழில்­நுட்ப உத­வி­யுடன் உரு­வாக்கும் திட்டம் பற்­றிய குறிப்­புகள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த விசா­ர­ணையை, பிர­தமர் அலு­வ­ல­கத்தின் வழி­காட்­டலில் வெளி­வி­வ­கார அமைச்சு நெறிப்­ப­டுத்தும் என்றும், ஐ.நாவின் தொழில்­நுட்ப உத­விகள் வழங்­கப்­படும் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

வடக்கு மாகா­ண­ச­பையும்- இலங்கை அர­சாங்­கமும் இதனைப் பங்­கா­ளர்­க­ளாக இருந்து செயற்­ப­டுத்­து­வ­தென அந்த இர­க­சிய ஆவணம் கூறு­வ­தாக சனல் 4 குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த இர­க­சிய ஆவணம் இப்­போ­தைய சூழலில் கசிய விடப்­பட்­டுள்ள நோக்கம், இதனைத் தயா­ரித்­த­மைக்­கான நோக்கம், எல்­லாமே குழப்­பங்­க­ளையும் சந்­தே­கங்­க­ளையும் எழுப்ப வைக்­கின்றன.

குறிப்­பாக, எதிர்வரும் செப்­டெம்பர் மாதம் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இந்த இர­க­சிய ஆவணம் கசிந்­தி­ருக்­கி­றது.

இது ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் நம்­ப­கத்­தன்மை மற்றும் நேர்­மையின் மீது கேள்­வியை எழுப்ப வைத்­தி­ருக்­கி­றது. அதை­விட இலங்­கையில் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடக்கப் போகின்ற வேளை இது. இந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பதி­ல­ளித்தல், பொறுப்­புக்­கூறல், சர்­வ­தேச விசா­ர­ணையை எதிர்­கொள்ளல் என்­பன இரு­த­ரப்­பிலும் தாக்கம் செலுத்தும் விட­யங்­க­ளாக உள்­ளன.

ஏற்­க­னவே ஐ.நா விசா­ரணை அறிக்­கையின் பிரதி இலங்கை அர­சாங்­கத்­துக்கு, ஆகஸ்ட் 21ஆம் திகதி அனுப்பி வைக்­கப்­படும் என்ற தகவல் கிடைத்த நிலையில் தான், அதற்கு முன்னர் தேர்­தலை நடத்த வேண்டும் என்று அவ­ச­ர­மாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­தி­ருந்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. அப்­ப­டி­யி­ருக்­கையில், ஐ.நா அறிக்கை வெளி­வ­ரு­வ­தற்கு முன்­ன­தா­கவும்- பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­தா­கவும், இந்த ஆவணம் கசிந்­தி­ருப்­பது சற்று நெரு­ட­லான விட­ய­மா­கவே தெரி­கி­றது.

இன்­னொரு பக்­கத்தில், பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக, ஐ.நா. அறிக்கை போன்ற போலி விசா­ரணை அறிக்­கையை வெளி­யிட்டு, சிங்­கள மக்­களை திசை திருப்ப மஹிந்த ராஜபக் ஷ தரப்பு முயற்­சி­களை எடுத்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ உள்­ளிட்ட 42 பேரை போர்க்­குற்­ற­வா­ளி­க­ளாக அந்த அறிக்­கையில் கூறப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதில் கூறப்­பட்­டி­ருந்­தது. ஐ.நா. அறிக்­கையை வைத்து சிங்­கள வாக்­கா­ளர்­களைக் கவரும் உத்­தியை முன்­னரே, எதிர்த்­த­ரப்பு வகுத்­தி­ருப்­ப­தாக தக­வல்கள் உலா­வின.

இந்த பின்­ன­ணியில், ஐ.நாவும், இலங்கை அரசும் இணங்­கி­யி­ருப்­ப­தாக ஓர் ஆவணம் கசிந்­தி­ருப்­பதும், அது எந்­த­ள­வுக்கு உண்மைத் தன்மை வாய்ந்­தது என்­ப­துவும் கேள்­விக்­கு­ரி­யது.

கடந்த மார்ச் மாதம் இலங்கை வந்­தி­ருந்த, ஐ.நா உத­விச்­செ­யலர் ஜெப்ரி பெல்ட்மன் தான், இலங்கை அர­சுடன் இந்த திட்டம் குறித்து பேசி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. அதே­வேளை, சனல் 4 வெளி­யிட்ட ஆவணம் குறித்து கருத்து வெளி­யிட மறுத்த வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர், மஹே­சினி கொலன்னே, எனினும், இது பெரும்­பாலும் உண்­மை­யாக இருக்­காது என்று கூறி­யி­ருக்­கிறார். அத்­த­கைய எந்த இணக்­கப்­பாடும் ஏற்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அது­போ­லவே, ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் பேச்­சாளர், ஸ்டீபன் டுஜா­ரிக்கும், இது­பற்­றிய தக­வல்கள் தன்­னிடம் இல்லை எனத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இருந்­தாலும், இந்த இர­க­சிய ஆவணக் குறிப்பில், இடம்­பெற்­றி­ருந்த உள்­நாட்டு விசா­ர­ணையின் பங்­கா­ளர்­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த வடக்கு மாகா­ண­ச­பையின் முதல்வர் விக்­னேஸ்­வரன், இது­பற்றித் தன்­னுடன் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை என்று நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.

இந்த நிலையில், ஒரு­வேளை இத்­த­கைய இர­க­சிய ஆவ­ணங்­களின் மூலம், அர­சியல் நலன்­களை அடையும் முயற்­சிகள் ஏதும் இருந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

தற்­போ­தைய அர­சாங்­கத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், உள்­நாட்டு விசா­ர­ணையே மேற்­கொள்­ளப்­படும் என்று நம்ப வைப்­ப­தற்­கா­கவும், இந்த ஆவணம் கசி­ய­வி­டப்­பட்­டி­ருக்­கலாம்.

இதன் மூலம் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­சா­ரங்­களை பல­வீ­னப்­ப­டுத்த முடியும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆனால், கொழும்பில் இது சூடு­பி­டிக்க முன்­னரே, வடக்கில் இது எதிர்­ம­றை­யான நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த ஆவணம் கசிந்த மறு­நாளே, ஐ.நா. விசா­ர­ணையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே, உள்­நாட்டு விசா­ர­ணை­யாக குறுக்கி விட்­ட­தாக குற்­றச்­சாட்டை வீசி­யி­ருக்­கி­றது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலை­யிலும், உள்­நாட்டு விசா­ர­ணைக்கு கூட்­ட­மைப்பு இணங்­கி­யுள்­ள­தான ஒரு குற்­றச்­சாட்டை கஜேந்­தி­ர­குமார் சுமத்­தி­யி­ருக்­கிறார்.

எவ்­வா­றா­யினும், உள்­நாட்டு விசா­ரணை என்ற விடயம் ஏற்­க­னவே இலங்கை அர­சாங்­கத்­தினால் வலி­யு­றுத்­தப்­பட்டு வரும் நிலையில், இந்த இர­க­சிய ஆவ­ணத்தின் உள்­ள­டக்கம் அதிகம் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை.

ஐ.நாவின் தொழில்­நுட்ப உத­வி­க­ளுடன் உள்­நாட்டில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்று அந்த ஆவணம் கூறி­யி­ருக்­கி­றது.

இலங்கை அர­சாங்கம் அமைப்­ப­தாக கூறிய, உள்­நாட்டு விசா­ரணை மே, ஜூன், ஜூலை என்றும் இப்­போது செப்­டெம்பர் என இழு­ப­றிக்­குள்­ளாகி நிற்­கி­றது. அது கூட, ஜெனீவா அமர்வு செப்­டெம்­பரில் நடக்­காது என்று உறு­தி­யானால், பிற்­போ­டப்­பட்டு விடும்.

ஏனென்றால், ஜெனீவா அமர்­வுக்கு முன்னர், உள்­நாட்டு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­படும் என்று கூறிய அர­சாங்கம், இப்­போது, ஐ.நா. அறிக்­கையை பார்­வை­யிட்ட பின்­னரே, அதை அமைப்போம் என்று கூறி­யி­ருக்­கி­றது.

இலங்­கையில் ஆட்­சியில் அமரும் எந்த அர­சாங்­க­முமே, போர்க்­குற்­றங்கள் குறித்த எந்­த­வொரு விசா­ர­ணை­யிலும் அக்­க­றை­யின்­றியே உள்­ளது.

முன்­னைய அர­சாங்­க­மா­னாலும் சரி, தற்­போ­தைய அர­சாங்­க­மா­னாலும் சரி- அது தான் நிலைமை.

இன்­னமும், ஐ.நா. அறிக்கை வெளி­யா­காத நிலையில், எதற்­காக இந்த உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றைக்­கான இர­க­சியக் கலந்­தாய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்­பது கேள்­விக்­கு­றி­யாக இருக்­கி­றது.

ஐ.நா. அறிக்­கையில் ஒரு­வேளை, சர்­வ­தேச விசா­ர­ணைகள் வலி­யு­றுத்­தப்­பட்டால், இந்த உள்­நாட்டு விசா­ரணை அதனைப் பல­வீ­னப்­ப­டுத்தி விடும்.

இந்த அச்சம் தான் தமிழர் தரப்­புக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. உள்­நாட்டு விசா­ரணை மீது தமி­ழர்கள் தமக்கு நம்­பிக்கை இல்லை என்று உறு­தி­யாக கூறி­வரும் நிலையில்- அதனைக் கருத்தில் எடுக்­காமல் ஐ.நா ஒரு­த­லைப்­பட்­ச­மான தீர்­மா­னங்­களை எடுக்கத் துணிந்­தி­ருக்­கி­றதா என்ற சந்­தேகம் மனித உரிமை அமைப்­பு­க­ளி­டையே எழுந்­தி­ருக்­கி­றது.

போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்களில் அநேகமானவர் கள் தமி­ழர்கள். அவர்­களின் நியா­யத்­தையோ, அவர்­களின் ஒப்­பு­த­லையோ பெறாமல் தன்­னிச்­சை­யாக நடத்தும் உள்­நாட்டு விசா­ர­ணையால், ஐ.நா. எதைச் சாதிக்க நினைக்­கி­றது என்று தெரி­ய­வில்லை.

பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் ஒத்­து­ழைக்­காத எந்த விசா­ர­ணையும், முழுமை பெறாது.

அத்­த­கை­ய­தொரு கட்­டத்­துக்குள் தமி­ழர்­களைத் தள்­ளு­வ­தற்குத் தான் இலங்கை அரசு முனை­வ­தாகத் தெரி­கி­றது. அதற்கு ஐ.நாவும் துணை­போ­கி­றதா என்ற கேள்­வியும் எழுந்­தி­ருக்­கி­றது.

உள்­நாட்டு விசா­ரணை என்று இது­வரை எத்­த­னையோ மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆனால், அவற்றின் உருப்­ப­டி­யான நன்­மை­களும் கிட்­ட­வில்லை.

உதா­ர­ணத்­துக்கு, ஏற்­க­னவே, மஹிந்த ராஜபக் ஷவினால் நிய­மிக்­கப்­பட்ட காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­குழு ஒன்று இருக்­கி­றது.

அது பெய­ருக்கு அமர்­வு­களை நடத்­தி­யது. ஒரு இடைக்­கால அறிக்­கை­யையும் கொடுத்­த­தாக கூறி­யது.

இப்­போது சில சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிக்க 5 பேர் கொண்ட புதிய அதி­கா­ரி­களை அந்தக் குழு ஒன்றை நிய­மித்­துள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது காணா­மற்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்று கண்­ட­றி­வ­தற்­கான – மேல் விசா­ரணை நடத்­து­வ­தற்­கான ஒரு நட­வ­டிக்கை.

இந்­த­நி­லையில், கடந்த வாரம் யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேர்தல் முடிந்த பின்னர் காணா­மற்­போ­ன­வர்­களை கண்­ட­றி­வ­தற்­கான செய­லணி ஒன்றை அமைக்­க­வுள்­ள­தாக கூறி­யி­ருக்­கிறார்.

தனது மேற்­பார்­வையில் இது செயற்­படும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

எதற்­காக இந்த செய­லணி? – அவ்­வா­றாயின் முன்­னைய விசா­ர­ணை­களில் அவ­ருக்கு நம்­பிக்­கை­யில்­லையா? நம்­பிக்­கை­யில்லா விசா­ர­ணையை எதற்­காக தொடர வேண்டும்? இது­போல எத்­தனை ஆணைக்­கு­ழுக்கள், செய­ல­ணிகள், நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­னவோ தெரி­ய­வில்லை. ஆனால், ஒன்றில் கூட உண்­மைகள் வெளி­வ­ர­வில்லை.

காணா­மற்­போ­ன­வர்­களில் ஒருவர் தானும் கண்­டு ­பி­டிக்­கப்­ப­ட­வில்லை அல்­லது அவ­ருக்கு என்ன நேரிட்­டது என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அடுக்­க­டுக்­கான விசா­ர­ணைக்­கு­ழுக்­களை அமைத்து மக்­க­ளையும் சர்­வ­தேச சமூ­கத்­தையும் ஏமாற்­று­வதே இலங்கை அரசின் வாடிக்­கை­யாகி விட்­டது. அதற்கு, சந்­தி­ரிகா, ரணில், மஹிந்த, மைத்­தி­ரி­பால சிறி­சேன என்று எந்த சிங்­களத் தலை­மை­யுமே விதி­வி­லக்­கா­ன­வர்கள் அல்ல.

அனை­வ­ருமே, தமி­ழ­ருக்கு எதி­ரான அநீ­தி­களை வேடிக்கை பார்த்­த­வர்கள், அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­த­வர்கள் தான்.

இப்­ப­டி­யான நிலையில் தான் தமி­ழர்கள் சர்வ தேச விசாரணையின் மூலமே தமக்கு நீதி கிடைக் கும் என்று அசையாத நம்பிக்கையை கொண்டி ருக்கின்றனர். இந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் தான் ஐ.நாவின் இரகசிய ஆவணத்தின் தகவல்கள் அமைந்திருக்கின்றன.

போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்களைக் கருத்தில் கொள்ளாமல், ஐ.நாவோ அல்லது அமெ ரிக்காவோ, தன்னிச்சையாக உள்நாட்டு விசாரணை களை மேற்கொள்வதற்கு இணங்கினாலும் கூட, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடப் போவ தில்லை.

ஏனென்றால், இந்த விசா­ர­ணைகள் உண்­மை­யா­ன­தாக- நேர்­மை­யா­ன­தாக – நம்­ப­க­மா­ன­தாக – நடு­நி­லை­யா­ன­தாக அமைய வேண்டும். அதற்கு பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆத­ரவு அவ­சியம்.

தமி­ழர்­களின் நம்­ப­கத்­தன்­மையை சோத­னைக்­குள்­ளாக்கி நடத்­தப்­படும் எந்த விசா­ர­ணையும், போலி­யா­ன­தொன்­றாக, பெய­ருக்கு நடத்­தப்­படும் ஒன்­றா­கவே இருக்கும்.

அமெ­ரிக்கா, இந்­தியா அல்­லது ஐ.நா. எந்த நாடா­கவோ, எந்த அமைப்­பா­கவோ இருந்­தாலும், நியா­ய­மான பொறுப்­புக்­கூறல் மூலம் இலங்கைத் தீவில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த எண்­ணினால், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பக்கம் அவர்கள் நிற்க வேண்­டி­யி­ருக்கும்.

இவ்­வாறு இலங்கை அர­சுடன் செய்யும் இரகசிய உடன்பாடுகளின் மூலம் அந்த நல்லிணக்கம் ஒரு போதும் சாத்தியப்படாது.

Share.
Leave A Reply

Exit mobile version