carவாகனங்களின் வடிவமைப்பு எப்படி உருவாகி, பின்னர் வளர்ந்தன என்பதைக் காட்டும் ஒரு கண்காட்சி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு ‘எட்செல் ஃபோர்ட் மாடல் 40’ வாகனத்தை இப்படத்தில் காணலாம்.

இந்தக் கண்காட்சியில், விளக்க வரைபடங்கள், மாதிரிகள் ஆகியவை, உலகின் பல பகுதிகளில் இருக்கும் கார் தயாரிப்பாளர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 1935 ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ‘புகாட்டி 57 S’ வாகனத்தை வடிவமைத்தவர்கள் ழான் புகாட்டி மற்றும் ஜோசப் வால்டர் ஆகியோர்.

‘கனவுக் கார்கள்’ எனும் தலைப்பில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியில், பல ஆண்டுகளாக எப்படி வாகன வடிவமைப்புகள் உருமாறியுள்ளன என்றும், அவை எப்படி எதிர்காலத்துக்கு வழி வகுக்கும் என்பதும் விளக்கப்பட்டிருந்தன. இந்த ‘ஸ்டவுட் ஸ்கராப்’ வாகனம் 1936 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் இருக்கும் வாகனத்தைப் போன்றவை, பெருமளவில் மொத்தமாக உருவாக்கப்படாவிட்டாலும், பின்னாளில் தொழில்நுட்ப ரீதியாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் வாகனங்கள் வடிவமைக்கப்பட பெரிதும் உதவின. ‘ல இயேஃப் எலக்ட்ரிக்’ 1942 ஆம் ஆண்டு பால் அர்சென்ஸால் வடிவமைக்கப்பட்டது.
இயந்திரப் பொறியாளர் நார்மன் டிம்ஸ், ‘டிம்ஸ் ஸ்பெஷல்’ எனும் இந்தக் காரை தனது சொந்த பயன்பாட்டுக்காக 1947 ஆம் ஆண்டு உருவாக்கினார். இதை உருவாக்க அவருக்கு இரண்டரை ஆண்டுகாலமும், 10,000 டாலர்களும் செலவாயின.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, முன்பகுதி வேகமாகத் திரும்பும் வல்லமைக் கொண்ட ஒரு காரை உருவாக்க வேண்டியத் தேவை ஜெனரல் மோட்டார்ஸுக்கு ஏற்பட்டது. அதை விளைவாக 1951 ஆம் ஆண்டு உருவானதே ‘ லெ சப்ரே XP 8 ‘

வாகனங்கள் குறித்து ஆர்வமாக இருந்த அமெரிக்க மக்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் மோட்டோரமா எனும் பெயரில் நடத்திய கண்காட்சி பெரும் விருந்தாக அமைந்தது. 1949 முதல் 1961 வரை அந்தக் கண்காட்சி நடைபெற்றது. அப்படியான ஒரு கண்காட்சியில்தான் ‘பக் சென்சூரியன்’ பார்வைக்கு வந்தது.

அதே கண்காட்சியில் பின்னர் காட்சிக்கு வந்ததுதான் ‘கடிலாக் சைக்ளோன் XP-74’. விமானங்களால் உந்தப்பட்ட ஹார்லி எர்ள் மற்றும் கார்ல் ரென்னர் ஆகியோர் இதை 1959 ஆம் ஆண்டு உருவாக்கினர்.

‘கனவுக் கார்கள் : புதுமையான வடிவமைப்பு, தொலைநோக்கு எண்ணங்கள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சி செப்டம்பர் 7 ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

 

Share.
Leave A Reply

Exit mobile version