புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியின் போது இந்த வருடத்தில் 2,000 க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கடந்த வார இறுதியிலான தரவுகளின் பிரகாரம் மத்தியதரைக் கடலைக் கடக்கும் முயற்சியில் 2000 குடியேற்றவாசிகளும் அகதிகளும் உயிரிழந்துள்ளனர் என மேற்படி அமைப்பின் பேச்சாளர் இதாயி விர்றி ஜெனிவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் கூறினார்.
அதேசமயம் இந்த வருடம் மத்தியதரைக்கடலைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட சுமார் 188,000 குடியேற்றவாசிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை 112 பேருடன் பயணித்த படகொன்றிலிருந்து 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஐவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அருந்த நீரின்றி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.