15 ஆண்டுகாலமாக திரைப்பட உலகில் இருந்தும் நடிகர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார் நடிகை ஸ்ரேயா.
வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.
இஷ்டம் என்ற தெலுங்கு படம் மூலம் 2001ல் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார் ஸ்ரோயா. எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் கோலிவுட்டிற்கு வந்தாலும், மழை என்ற படம்தான் தமிழில் நல்ல இடத்தினை கொடுத்தது.05-1438751536-shriya-saran57
ஸ்ரோயவிற்கு வாய்ப்பு
தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி படத்திலும் விஜய் உடன் அழகிய தமிழ் மகன் படத்திலும் நடித்தார். கடைசியாக ஜீவா ஜோடியாக ரவுத்திரம் படத்தில் நடித்து இருந்தார்.தற்போது தமிழில் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.
பாலிவுட்டில்
ஸ்ரேயா இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரிஷ்யம் படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு பாலிவுட்டில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது.

தெலுங்கு கன்னடத்தில்
எனினும் ஸ்ரோயவின் நடிப்பில் தெலுங்கில் வந்த பவித்ரா படமும் கன்னடத்தில் வந்த சந்திரா படமும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டன.
நடிகர்களுடன் காதலா
இந்த நிலையில் ஸ்ரேயாவை தெலுங்கு கதாநாயகர்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் ஸ்ரேயா இதனை மறுத்துள்ளார். கதாநாயகர்களுடன் என்னை தொடர்புபடுத்தி செய்திகள் வருகின்றன, அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

மாப்பிள்ளை கிடைக்கணுமே?
நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை. நிறைய கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது வேறு எந்த உறவும் கிடையாது. எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்வேன்.
15 ஆண்டுகால நடிப்பு
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஸ்ரேயா15 ஆண்டுகாலமாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் நடிகர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஸ்ரேயா? கடந்த ஆண்டே ஸ்ரோயவிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல்கள் வெளியானது. எந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரோ ஸ்ரேயா என்று கேட்கின்றனர் அவரது ரசிகர்கள்
Share.
Leave A Reply

Exit mobile version