பிராத்தனையில் ஈடுபட்டி இருந்தவர்கள் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சவுதியின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் ஒரு பகுதி பாதுகாப்பு படை வீரர்களின் தலைமையிடமாகவும் செயல்பட்டு வருகிறது.

அந்த குறிப்பிட்ட மசூதியில் இன்று பாதுகாப்புப் படை வீரர்களும் மற்றவர்களும் வழக்கமான தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீவிரவாதிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 10 பாதுகாப்புப் படை வீரர்களும், அங்கு வேலை செய்து வந்த 3 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version