2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொது தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் தமக்கு செய்தி ஒன்றை அனுப்பியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அதில் அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச தமக்கு பெருமளவு பணம் கொடுக்கவுள்ளார்.

அத்துடன் உறுதி கடிதம் ஒன்றையும் வழங்கவுள்ளார்.

இந்தநிலையில் தாங்களும் உறுதி மொழி அளித்தால் உங்கள் தொடர்பில் பரிசீலிக்க முடியும் என பிரபாகரன் தெரிவித்திருந்ததாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எனினும் தாம் அதற்கு உடன்படவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த சந்தர்பத்திலேயே மகிந்த ராஜபக்ச பிரபாகரனுக்கு பணம் வழங்கினார்.

இதனை பொய் என்று மகிந்த ராஜபக்ச இதுவரை நிராகரிக்கவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

 

 

https://youtu.be/wsbPlQOkQEI

 

Share.
Leave A Reply

Exit mobile version