காதல்..! மனித இனத்தை மட்டுமின்றி, இயற்கை மொத்தத்தையும் இயங்க வைக்கும் தீராத எரிபொருள்!!! ஆனால், அனைத்திலும் வகை பிரித்து வாழும் மனிதன், காதலையும் விட்டுவைக்கவில்லை.
காதலில் வகைகள் கண்ட ஒரே இனம் மனித இனம் என்பது மறுக்க முடியாத உண்மை. ரகசிய காதல், கள்ளக் காதல், உண்மையான காதல், நட்பான காதல், சும்மானாச்சுக்கும் காதல், விளையாட்டு காதல், பருவக் காதல் என்று பல வகைகளை பிரித்து அதற்கு பொருளடக்கமும் எழுதிவைத்த உன்னதமான இனம், மனித இனம் தான்.
பருவ வயதில் தொடங்கி பல்லு விழும் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காதல் கதைகள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படுகின்றன.
அந்த காதல்கள் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்….
13-1431508147-1seventypesofsecretcrushesyouallwillhave
எங்கேயும் எப்போதும் காதல்
வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது ஏற்படும் ஈர்ப்பு. பெரும்பாலானோருக்கு இந்த பகுதி நேர காதல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சில துருவ நட்சத்திர ராசிக் காரர்களுக்கு மட்டும் தான் அருகிலேயே இடமும் கிடைக்கும்.
திருமணங்களில் மலரும் காதல்
பெரும்பாலும் திருமணங்களின் போது தான் அனைத்து சொந்தங்களும் ஒன்று சேரும். அந்த நேரங்களில் வரும் தூரத்து சொந்த அழகு பெண்களின் மீது ஏற்படும் காதல். கண்டிப்பாக ஒவ்வொரு கல்யாணத்திலும், ஒரு புது காதல் மலர்ந்துவிடும். இதுப் போன்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
நண்பனின் காதலி
இது உண்மையிலேயே ஏடாகூடமான காதல் தான். நண்பனின் காதலுக்கு 24 மணி நேரமும் உதவும் நண்பர்களின் வாழ்க்கையில் இது ஏற்பட நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், நட்புக்கு இது பெரிய வேட்டு வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ எல்லாம், எப்போ? எப்படி? லவ்வு கூடு விட்டு கூடு மாயும் என்று சொல்ல இயலாது..
வல்லவன் காதல்
சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கூட இப்போது அதிகம் இது போன்ற காதல்கள் நடக்கின்றன. படித்து முடித்து வேலைக்கு வரும் இளம் ஆசிரியர்கள் மீது அரும்பு மீசை முளைக்கும் மாணவர்களுக்கு காதல் அரும்புவது தப்பு தான் எனிலும், சாதரணமாக நடக்கின்றது.
சகோதர்களின் நண்பர்கள்
உங்களது சகோதரன் அல்லது சகோதரியின் தோழர், தோழிகள் மீது காதல் ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ஆனால், இவர்களை உஷார் செய்வது கொஞ்சம் கடினம். முதல் சந்திப்புலேயே அண்ணா, அல்லது தங்கச்சி என்று கூறிவிடுவார்கள்.
பாஸ் மீது காதல்
“பாஸ்” மீது காதல் கொள்வதைவிட, அதிகமாக அவர்களது டீம் லீடர்கள் மீது காதல் கொள்ளும் கதைகள் ஐ.டி நிறுவனங்களில் நிறையவே நடக்கும். இதில் உள்ள நன்மை என்னவெனில், வேலை நன்கு நடக்கும். குற்றம், குறை ஏதும் நடக்காது, நடந்தாலும் அது பெரிதாகாது

அந்நியன் காதல்
யார் எவர் என்று தெரியாமல், பார்த்த நொடியில் ஏற்படும் காதல் தான் இந்த அந்நிய காதல். உலகில் 99% பேருக்கு இவ்வாறான காதல் தான் ஏற்படும். இதற்கு தமிழக திரையுலகின் 75 வருட படைப்புகளை சாட்சியாக எடுத்து வைக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
Share.
Leave A Reply

Exit mobile version