இன்னும் ஒரு வாரத்தில் நடக்­க­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்கு என்­று­மில்­லாத வகையில் வியூ­கங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்த தேர்­தலில் 20 ஆச­னங்­களைப் பெறு­வதன் ஊடாக பாரா­ளு­மன்­றத்தில் அசைக்க முடி­யாத பேரம் பேசும் பலத்தைப் பெற்றுக் கொண்டு, அர­சியல் தீர்வு ஒன்­றுக்­கான பெரும் பாய்ச்­சலை நடத்­து­வதே தமது இலக்கு என்­கி­றது கூட்­ட­மைப்பு.

அத்­த­கைய பெரும் பாய்ச்­ச­லுக்­கான ஆச­னங்­களில் பெரும்­பா­லா­ன­வற்­றுக்கு, கூட்­ட­மைப்பு பெரிதும் நம்­பி­யி­ருப்­பது வடக்கு மாகா­ணத்தைத் தான். யாழ்ப்­பா­ணத்தில் 07 ஆச­னங்­களும், வன்­னியில் 6 ஆச­னங்­க­ளு­மாக மொத்தம், 13 ஆச­னங்­களை வடக்கு மாகாணம் கொண்­டி­ருக்­கி­றது.

இதில், வன்­னியில் முஸ்­லிம்­க­ளுக்கு கிடைக்கக் கூடிய ஒன்று அல்­லது இரண்டு ஆச­னங்­களைத் தவிர்த்து, கூட்­ட­மைப்­புக்கு அதியுச்­ச­மாக இலக்கு வைக்கக் கூடிய ஆச­னங்கள் 11 அல்­லது 12 ஆகும்.

இவற்றில் குறைந்­த­பட்சம் 10 ஆச­னங்­க­ளை­யா­வது கைப்­பற்றி விட­வேண்டும் என்­பதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இலக்­காகும்.

ஆனால், வன்னி மாவட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அவ்­வ­ளவு சவால் கள் இல்­லா­வி­டினும், யாழ்ப்­பாண மாவட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை முடக்­கு­வ­தற்­கான தீவிர முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

கடந்த தேர்­தல்­களில் ஈ.பி.­டி.­பி.யை உள்­ள­டக்­கிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு முக்­கிய சவா­லாக இருந்து வந்­தது.

அதி­கார பலம், பண­பலம், ஆகி­ய­வற்றின் மூலமும் சலுகை அர­சி­ய­லி­னாலும், கூட்­ட­மைப்பை வீழ்த்தி விடு­வ­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு போட்டி கடு­மை­யா­ன­தாக இருந்­தாலும், அரச பின்­பு­லத்­து­ட­னான சக்­தி­களை எதிர்­கொள்­வது இல­கு­வா­ன­தாக இருந்­தது.

இம்­முறை, அப்­ப­டி­யல்ல. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சிங்­களக் கட்­சி­க­ளு­டனும் மோத வேண்­டி­யி­ருக்­கி­றது-. தமிழ்த் தேசி­ய­வாதக் கட்­சி­க­ளையும் சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

யாழ்ப்­பாணத் தேர்தல் களத்தில் நிற்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தவிர்ந்த மற்­றைய கட்­சிகள் அனைத்­துமே, குறைந்­த­பட்ச ஆசனக் குறிக்­கோளைத் தான் கொண்­டி­ருப்­பவை என்­பதில் சந்­தே­க­மில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 7 ஆச­னங்­க­ளையும் தாருங்கள் என்று கோரி­யது. அது கிடைக்கும் என்ற நம்­பிக்­கை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யது. அவர்­க­ளுக்கு ஒன்­றி­ரண்டு ஆச­னங்கள் குறை­வாக கிடைக்­கலாம் என்று தெரிந்­தி­ருக்கக் கூடும்.

ஆனாலும், உயர்ந்­த­பட்ச ஆசனக் கணக்கு ஒன்றை நிர்­ண­யிக்கும் பலத்தை கூட்­ட­மைப்புக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

கூட்­ட­மைப்­புடன் மோதும், ஐ.தே.க., ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஈ.பி.­டி.பி. போன்ற கட்­சி­க­ளா­கட்டும், அல்­லது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஜன­நா­யகப் போரா­ளிகள் போன்ற கட்­சி­க­ளா­கட்டும், ஒரு ஆச­னத்­துக்கு மேல் கிடைக்கும் என்ற நம்­பிக்கை கொள்­ள­வில்லை.

இந்தக் கட்­சி­களில் பெரும்­பா­லா­னவை அதி­க­பட்சம் மூன்று ஆச­னங்­களைத் தான் எதிர்­பார்ப்­ப­தாக கூறி­யி­ருக்­கின்­றன. ஆனா லும் கிடைக்கும் என்று உள்­ளுக்குள் நம்­பு­வது ஒரு ஆச­னத்தை மட்டும் தான்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக- இந்த ஐந்து அர­சியல் கட்­சி­களும் பிர­சார யுத்­தத்தை தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

அதற்குக் காரணம், மிகப்­பெ­ரிய வெற்றி வாய்ப்­புள்ள கட்சி அது தான்.

அதன் வாக்கு வங்­கியை உடைத்து, வாக்­கு­களைப் பகிர்ந்து கொள்­வது தான் இந்தக் கட்­சி­களின் நோக்கம். ஏனென்றால், மேற்­கூ­றப்­பட்ட ஐந்து கட்­சி­க­ளுக்கும் பெரி­ய­ளவில் நிலை­யான வாக்கு வங்கி ஏதும் இருப்­ப­தாக கூற முடி­யாது.

எனவே, வெற்­றிக்­காக அவர்கள் கூட்­ட­மைப்பின் வாக்கு வங்­கியைச் சுரண்­டி­யாக வேண்டும். அதனால் தான் எல்லாப் பக்­கத்தில் இருந்தும் கூட்­ட­மைப்­புக்கு அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

கூட்­ட­மைப்பைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கு எல்லாப் பக்­கங்­களில் இருந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த முயற்சி, எந்­த­ள­வுக்கு வெற்றி பெறும் என்­பது, வாக்­கா­ளர்­களின் கைக­ளிலும், அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்டும் கூட்­ட­மைப்பின் பிர­சா­ரங்­க­ளிலும் தான் தங்­கி­யி­ருக்­கி­ன்றன.

கூட்­ட­மைப்பின் வாக்கு வங்­கியைச் சுரண்­டு­வ­தற்­காக மட்டும் தான், ஏனைய கட்­சிகள் கூட்­ட­மைப்பை நோக்கி ஒரே திசையில் தாக்­கு­கின்­ற­னவா அல்­லது, அவை­ய­னைத்தும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்­பட முனை­கின்­ற­னவா என்றும் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தோற்­க­டித்தல் என்ற மூலோ­பாயம், சாதா­ர­ண­மாக கட்சி மட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு திட்­ட­மாகத் தெரி­ய­வில்லை.

அதற்கு அப்பால் பல மட்­டங்­களில் இது ஒரு ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்­கப்­ப­டு­வ­தா­கவே தெரி­கி­றது.

வரும் பாரா­ளு­மன்றம் யாருக்கும் பெரும்­பான்­மையை கொடுக்­காத ஒன்­றாக- அமை­வது பெரும்­பாலும் உறு­தி­யா­கி­விட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பல­மான கட்­சி­யாக உரு­வெ­டுப்­பதை, எந்தத் தரப்­புமே விரும்­பு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

அது கூட்­ட­மைப்பின் அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணியும் நிலை ஒன்றை உரு­வாக்கி விடும் என்று பிர­தான சிங்­களக் கட்­சிகள் மட்டும் சிந்­திக்­க­வில்லை. ஏனைய சிங்­களக் கட்­சி­க­ளுக்கும் அதே நிலைப்­பாடு உள்­ளது.

அதா­வது கொழும்பு அர­சி­யலின் ஸ்திர­மான சக்­தி­யாக கூட்­ட­மைப்பு மாறு­வதை, சிங்­களப் பேரி­ன­வாத சக்­தி­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது.

அதே­வேளை, தமிழ் மக்­களின் வலு­வான பிர­தி­நி­தி­க­ளாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாறு­வதை புறச்­சக்­தி­களும் விரும்­பு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் இருந்­தது போன்ற ஒரு வலு­வான நிலையில், தமிழர் தரப்பு இருக்கும் வரைக்கும், முக்­கி­ய­மான விவ­கா­ரங்­களில், தமது இழுப்­புக்­கெல்லாம் ஆடு­கின்­ற­வர்­க­ளாக அவர்­களை மாற்ற முடி­யாது என்ற கணிப்பு புறச்­சக்­தி­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய கட்­டத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக மாற்றம் பெறு­வதை, வலுப்­பெ­று­வதை புறச்­சக்­திகள் விரும்­ப­வில்­லையா? என்ற சந்­தேகம் தோன்­று­கி­றது.

ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் பின்­ன­ரான இலங்கை மீதான நட­வ­டிக்கை, குறைந்­த­பட்ச அழுத்­தத்தைக் கொடுக்கும் ஒன்­றாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலு­வான சக்­தி­யாக இருந்தால் மாத்­தி­ரமே அதனை உறு­தி­யாக எதிர்க்க முடியும். இல்­லா­விட்டால், ஒரு சிறிய கட்­சியின் எதிர்ப்பு என்ற வகைக்குள் அது அடக்­கப்­பட்டு விடும்.

இது­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமிழ் மக்­களின் பிர­தி­தி­க­ளாக ஏற்றுக் கொண்டு பேசிய சர்­வ­தேச சமூகம், கூட்­ட­மைப்பு தோற்­க­டிக்­கப்­பட்டால் அவர்­களை கைக­ழுவி விடும் முடிவை எடுக்கும்.

அதே­வேளை, தமிழ்­மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக பல கட்­சிகள் தெரி­வாகும் போது, அவை எல்­லா­வற்­று­டனும் கலந்­து­ரை­யா­டப்­படும் போக்­கையும் சர்­வ­தேச சமூகம் தவிர்த்துக் கொள்ளும்.

சர்­வ­தேச சக்­தி­களைப் பொறுத்­த­ளவில் பல்­வேறு மட்­டங்­க­ளிலும் தமது அர­சியல் உரை­யா­டல்­களை வைத்துக் கொண்­டாலும், அவற்­றுக்­கெல்லாம் அதி­கா­ர­பூர்வ அந்­தஸ்த்தைக் கொடுக்­காது.

இதனால், ஒட்­டு­மொத்த தமிழர் தரப்பின், நலன் தான் அடி­பட்டுப் போகும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு நிக­ரான பல­முள்ள ஒரு தமிழ்த் தேசிய அமைப்பு உரு­வாக்­கப்­பட்டால் அல்­லது அது மக்­களின் செல்­வாக்கைப் பெற்றால், தமிழர் நலனில் பாதிப்பு ஏற்­ப­டாது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் பெரி­ய­ளவில் தோல்­வியை ஏற்­ப­டுத்­தாமல், தாமும் பெரி­ய­ளவில் வெற்றி பெறாமல்- ஓரி­ரண்டு ஆச­னங்­க­ளுக்குள் முடங்கிக் கொள்ளும் அர­சியல் கட்­சி­களால், சர்­வ­தேச அளவில் தமி­ழரின் ஒட்­டு­மொத்த நலனே பாதிக்­கப்­படும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிக்க கங்­கணம் கட்­டி­யுள்ள கட்­சி­களும் தரப்­பு­களும், செய்­யப்­போ­வது, பாரா­ளு­மன்­றத்தில் தமி­ழரின் பலத்தை குறைப்­பது மட்­டு­மன்றி, சர்­வ­தேச அரங்­கிலும் தமி­ழரின் குரலை பல­வீ­னப்­ப­டுத்­து­வதும் தான்.

கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிக்கும் இலக்­குடன் கள­மி­றங்­கி­யுள்ள கட்­சிகள், வாக்­கு­களைப் பிரிப்­பதால், ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது அவற்றைச் சார்ந்த கட்சிகளையே பாராளுமன்றத்தில் பலப்படுத்தப் போகின்றன. திருகோணம லையிலும், அம்பாறையிலும் தமிழரின் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலை கூடத் தோன்றலாம்.

இத்தகையதொரு நிலை ஏற்பட்டால், உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தமிழ ரின் குரல் ஒடுங்கும் நிலை ஏற்படும்.

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழரின் நலனை முன்னிறுத்துதல் தான் முக்கியமானது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழர் நலன் என்ற மிகப்பெரிய விவகாரம், கட்சி அரசியலுக்குள்ளேயும், தனிப்பட்ட அரசி யல் நலன்களுக்குள்ளேயும் முடங்கிப் போயிருக்கிறது.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எல்லாவற்றையும் சிந்தித்து தமது தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

அவர்களின் தெரிவு எப்படி அமையப் போகிறது என்பதைப் பொறுத்தே, தமிழரின் தலைவிதி எப்படி மாறப் போகிறது என்பது தெரிய வரும்.

சத்­ரியன்

Share.
Leave A Reply

Exit mobile version