பிரபல நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.
முதல் இரு படங்கள் ஓரளவு ஓடினாலும், அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், அசின் பெரிதாக எடுபடவில்லை பாலிவுட்டில்.
இப்போது ஆல் ஈஸ் வெல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தேடி வந்த சில வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம்.
காரணம் மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் காதலித்து வருகிறார். இவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.
எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தர விரும்புகிறேன்,” என்றார். விரைவில் திருமணத்தை முறைப்படி அறிவிக்கவிருக்கிறார் அசின்.