“ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை.
இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
படத்தின் நீளம் 2 மணி நேரம் 22 நிமிடங்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடலான பேபி சிக்கி சிக்கி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்பாடலை கிருத்திகா நெல்சன் வரிகளில் ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.