காபூல்: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தானுக்குள் நுழைந்த டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் கீழ் சுரங்கத்தில் பணியாற்றும் 16 பேரை கடத்தி சென்றுள்ளனர்

இவர்களை வைத்து வெடிகுண்டு தயாரிக்க டிடிபி அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் என்பது வலுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர், பாகிஸ்தானுடன் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இருநாட்டு எல்லையில் டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதலை தொடங்கி உள்ளது.

கடந்த 2 வாரமாக இந்த மோதல் நடந்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தாலிபான்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது.

இந்நிலையில் தான் எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த டிடிபி அமைப்பினர் 16 பேரை கடத்தி சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையையொட்டி பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது.

இந்த மாகாணத்தின் லக்கி மார்வத் மாவட்டத்தில் நுழைந்த தாலிபான்களில் காரில் பதுங்கி இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வாகனத்தில் பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் கீழ் சுரங்கம் ஒன்றில் பணியாற்றும் நபர்கள் பணிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை கவனித்த டிடிபி அமைப்பினர் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தீவைத்து எரித்தனர். மேலும் அதில் இருந்த சயின்ஸ்டிஸ்ட், பணியாளர்கள் என்று மொத்தம் 16 பேரையும் டிடிபி அமைப்பினர் காரில் கடத்தி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர்.

இதுபற்றி பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் , ‛‛கடத்தப்பட்டவர்கள் சயின்ஸ்டிஸ்ட் அல்ல. அவர்கள் சாதாரண நபர்கள் தான்’’ என்று கூறியுள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் அரசு, தூதரகம் சார்பில் எந்த கருத்தும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே தான் வீடியோ ஒன்று பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version