மதுவின் கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராடி வரும் நிலையில், மது போதையால் பச்சிளம் குழந்தை மரணமடைந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் மயங்கிய பெண்ணின் பெயர் மலர்க்கொடி என்பதாகும். இவர் உடுமலைப்பேட்டை அமராவதி நகரைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவியாவார்.

இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. மலர்க்கொடிக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று உடுமலைப்பேட்டை பேருந்துநிலையம் அருகே குடிபோதை அதிகமாகவே மலர்கொடி தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

மலர்க்கொடியின் ஒரு வயது குழந்தை அழுது அழுது பசியால் மயக்கம் அடைந்தது.

 குழந்தையும், தாயும் நீண்ட நேரம் மயக்க நிலையில் கிடந்ததையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குடிபோதையில் இருந்த குழந்தையின் தாய் மலர்க்கொடி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மேட்டூரில் மதுபோதையில் மயங்கிய தந்தையால் இரண்டு குழந்தைகள் பசியால் அலறி துடித்தனர்.

அவர்களை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் பெண் ஒருவர் மதுபோதையில் மயங்க பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version