குஜராத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தி ற்கு உள்ளான பெண் ஒருவரின் பத்தினிதன்மையை நிரூபிக்க 40 கிலோ எடையுள்ள கல்லை தலையில் சுமக்க வேண்டும் என பஞ்சாயத்து தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தில் திருமணமான பெண் ஒருவர், அவரது ஊரைச் சேர்ந்த ஒருவராலே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்த நிலையில், கருவை கலைக்க அனுமதி வேண்டி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. குழந்தை யைப் பெற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண் மீண்டும் தனது கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார்.
ஊர் பஞ்சாயத்தார் அதற்கு, கணவருடன் வாழ 40 கிலோ எடையுள்ள கல்லை தலை யில் சுமக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.
அந்தக் கல்லை சுமக்க முடியவில்லை என்றால் அந்த பெண் கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
கலாமின் சமாதியில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி: வல்லரசு கனவுக்காக அயராது உழைப்போம் என இளைஞர்கள் உறுதிமொழி
13-08-2015
இதுவரை 2 இலட்சம் பேர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கலாம் சமாதிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா உள்ளி ட்ட வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தவறாமல் கலாம் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.
ஒரு நாளைக்கு சாராசரியாக 10 ஆயிரம் பேர் வீதம் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
அப்துல்கலாம் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய உசிலம்பட்டி கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் “தூங்கும்போது வருவது கனவு அல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வது தான் உண்மையான கனவு’ என கூறிய அப்துல்கலாம் மாணவர்கள், இளைஞர்களுக்கு விடிவெள்ளியாக திகழ்ந்தார்.
அவர் மறையவி ல்லை, கோடிக்கணக்கான மாணவர்கள் மனதில் வாழ்கிறார். அவர் வழிகாட்டிய இலட்சிய பயணம் வெற்றி பெறவும், இந்தியா வல்லரசு நாடாக உருவாக நாங்களும் அயராது உழைப்போம் என அவரது சமாதியில் உறுதி மொழி எடுத்துள்ளதாக தெரி வித்தனர்.