எனது மக்களின் உரிமை களுக்காக குரல் கொடுக்கவும், மக்களின் நல்வாழ்வுக்கான செயற்பாடுகளையும் எவர் தடுத்தாலும் கைவிட மாட்டேன்.
என் மக்களுக்காக சிறை செல்லவும் அஞ்சமாட்டேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகதுரை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு இனவாதிகளும் அவர்களோடு இணைந்த சிலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கை யில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்க்கின்றது. அதே வேளை முஸ்லிம்க ளின் இன உரிமை, இஸ்லாமிய மத உரிமைகளை பாதுகாக்கவும் பின்னிற்க மாட் டோம்.
கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இறுதிக் கால கட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை பார்த்துக் கொண்டு மெளனம் காத்தார்.
அளுத்கமவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
அமைச்சரவையில் இதுபற்றி விவாதித்தோம்; தீர்வு கிடைக்கவில்லை. 16 முஸ்லிம் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு முஸ்லிம்களை பாதுகாக்குமாறும் இஸ்லாமிய மத விடயங்களை சுதந்திரமாக முன்னெடுக்கும் நிலைமையை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தினோம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ செவிமடுக்கவில்லை.
இறுதியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம்.
இனவாதமற்ற, மதவாதக் கொள்கையற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியில் இணைந்தோம்.
இன்று இப்பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின் றோம். அம்பாறையில் மட்டும் மயில் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
முஸ்லிம்களின் இன உரிமைகள், மதச் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே ஐ.தே.முன்னணியுடன் நாம் செய்துள்ள எமது முதலாவது உடன்பாடாகும்.
அதேபோன்று வடக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்.
எமது மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிகளுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்கவும். தொழிற்துறைகளில் வாய்ப்புக்களை வழங்குவதோடு, மீன்பிடித்தொழில், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் முன்னுரிமை வழங்குவோம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியில் இவையனைத்திற்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம். மாபெரும் வெற்றியை பெறுவோம்.
வில்பத்து, வன்னி மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக இனவாதிகள் பல முட்டுக்கட்டைகளை போட்டார்கள்.
வில்பத்து காடு அழிக்கப்பட்டு முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் முன்வைத்தனர்.
மறிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம் இவையெல்லாம் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த கிராமங்கள். 1990களில் அங்கிருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்தனர்.
அம்மக்களை தான் சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தினோமே தவிர வில்பத்து காடு அழிக்கப்படவில்லை.
இந்த உண்மையை பல தடவைகள் இனவாதிகளுக்கு தெளிவுபடுத்தியும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
முஸ்லிகளின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக இனவாதத்தை தொடர்ந்தனர்.
இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் எனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வில்பத்து காடு அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது எனது அரசியல் வாழ்வுக்கு எதிரான சதித்திட்டமாகும். எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்ட முயற்சிக்கும் இனவாதிகளினதும் அவர்களோடு இணைந்த சில புல்லுருவிகளினதும் செயற்பாடுகளாகும்.
அதேவேளை இந்த வழக்கு தொடரப்பட்டது நல்லதாகும்.
ஏனென்றால் 1906ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்கள் வாழ்ந்த இப்பிரதேசங்கள் தொடர்பாக ஆவணங்கள் உள்ளது.
வாக்காளர் இடாப்பில் மக்கள் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. பழைமையான பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு மக்கள் மீளக் குடியேற்றம் சட்ட ரீதியாக குடியேற்றப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக சட்ட ரீதியான மீள்குடியேற்றம் என்பதை நிரூபிக்க முடியும்.
எனவே இது எமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். எனவே நீதிமன்றத்தில் எமது பக்கத்து நீதி நியாயத்தை நிலைநிறுத்த முடியும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத சில விஷமிகள் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
இதற்கெல்லாம் எமது மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். நாம் 8 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். போனஸ் ஆசனங்கள் 2 உடன் பத்து ஆசனங்கள் எமக்கு கிடைக்கும்.
சத்தியம் வெல்லும். எனது வெற்றியை மக்கள் உறுதி செய்து விட்டனர் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.