கோடம்பாக்கத்தை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன் என, அதிரடியாக களத்தில் குதித்துள்ளார் ராய் லட்சுமி.

தமிழில் இவருக்கு பெயர் சொல்லும்படியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் குத்தாட்டம் போடலாமா வாங்க என்று தான் கேட்கின்றனராம்.

ஆனாலும், ராய் லட்சுமி, பேய் லட்சுமியாக நடித்துள்ள சவுகார் பேட்டையை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இதை தொடர்ந்து அர்ஜுன் ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்கிறாராம். ராய் லட்சுமியின் திரை வாழ்வில் இனியாவது வசந்தம் வீசுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

lakshmirai

காதலர் தினத்தை பலரும் ரொமான்ஸுடன் கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் சனிக்கிழமை(14) அதிகாலையில் நடிகை ராய் லட்சுமி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு கருத்து (டுவிட்), பல ரசிகர்களின் இதயங்களில் காற்றைப்பிடுங்கி விட்டதுடன் பலரை அதிர்ச்சியடையவும் செய்தது. 

அப்படி என்ன கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்தார் என்று கேட்கின்றீர்களா?

‘ஓ மை காட்.. ஒரு வழியா நானும் என்னோட லவ்வரை இந்த காதலர் தினத்துல கண்டுபிடிச்சுட்டேன்’. இதுதான் அவர் பதிவு செய்த டுவிட்..

அதனை பார்த்து அவருடைய ரசிகர்கள் பல அதிர்ச்சியடைய..

சில நொடிகளில் ‘ஹாஹாஹா.. நல்லா ஏமாந்தீங்களா..! கொஞ்ச நேரத்துல நிறைய பேரோட இதயத்தை உடைச்சிருப்பேனோ..? ஆனால் எப்படி என்னை நேசிக்கும் அன்பு உள்ளங்களாகிய உங்கள் இதயங்களை என்னால் உடைக்க முடியும்.’ என மற்றுமொரு கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார்.

இதன் பின்னர்தான் சில நொடிகள் நின்றுபோன ரசிகர்களில் இதயத்தில் துடிப்பு சத்தம் கேட்டதாம். ‘ஏம்மா இதுலகூடவா விளையாடுவீங்க.. என்னம்மா.. இப்டி பண்றீங்களேம்மா’ .

– See more at: http://www.tamilmirror.lk/139846#sthash.jxqjx4xX.dpuf

Share.
Leave A Reply

Exit mobile version