பச்சிலங் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நகரப் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துள்ளனர்.
சந்தேகநபர்களில் வவுனியா மற்றும் புத்தளம், கொரப்பொத்தான பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் நால்வரும், யாழ். ஜின்னா வீதியில் தங்கியிருந்துள்ளனர்.
இந்தநிலையில் பிச்சை எடுக்கும் போது, 2 மாத குழந்தை பசியால் மயக்கமுற்றுள்ளது.
இதனைக்கண்ட யாழ். பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி பிரிவினர் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளை மீட்டதுடன், பிச்சை எடுக்க வைத்த பெண்களையும் பிடித்துள்ளனர்.
இவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 4 பேரும் பொலிஸாரினால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.