இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு புலிகளை அழிப்பதற்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதுபற்றிய “வண்டவாளங்கள்” இன்றைய தேர்தல்களத்தில் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
யாழ் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தயார் மீது சத்தியம் செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் எவ்வாறு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி காலை விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர்கள் சரண் அடைவதற்கு ஆலோசனை செய்துகொண்டிருந்த வேளையில் செயற்பட்டது என்று சில உண்மைகளை தெரிவித்துள்ளார்.
கீழே இணைக்கப்பட்டுள்ள சில நிமிட நேர கானொளியில் அவர் குறிப்பாக எவ்வாறு அப்போது இந்தியாவில் தங்கி இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எவ்வாறு விடுதலைப்புலிகளின் அரசியல் துறை தலைவர் பா. நடேசன் மற்றும் சமாதன செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைவது குறித்து அவரிடம் தான் ஆலோசனை பெற முயற்சித்த வேளை தனது தொலைபேசி அழைப்புக்களை நிராகரித்தார் என்று கூறுவதை கேளுங்கள்.