நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில்..

ஐக்கிய தேசியக் கட்சி (93 + 13 தேசியப் பட்டியல்) 106 ஆசனங்களையும்…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (83 + 12 தேசியப் பட்டியல்) 95 ஆசனங்களையும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (14+ 02 தேசியப் பட்டியல்) 16 ஆசனங்களையும்…

ஜே.வி.பி ஆசனங்களைப் (04+ 02 தேசியப் பட்டியல்) 06 ஆசனங்களையும்…

சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனத்தையும்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்கள் இல்லாத நிலையில் , ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் படி தேசிய அரசாங்கம் ஒன்றே அமைக்கப்படவிருக்கிறது.

இதேவேளை, ஜே. வி. பி இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

கடந்த தேர்தலில் 07 ஆசனங்களை வென்றிருந்த ஜே வி பி இம்முறை 4 ஆசனங்களை மட்டுமே இதுவரை பெற்றிருக்கிறது.

அதேவேளை, சிறு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்று 14 ஆசனங்களை பெற்றுள்ளது.

கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் மூலம் 1 அல்லது 2 ஆசனங்கள் கிடைக்கும் நிலைமை காணப்படுகிறது.

unpa

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2015 (இறுதி முடிவுகள்)

கட்சிகள் வென்ற இடங்கள் பெற்ற வாக்குகள் வாக்கு சதவீதம்
ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி 93 50,98,927 45.7%
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டணி 83 47,32,669 42.4%
ததேகூ 14 5,15,963
ஜேவிபி 4 5,43,944 4.9%
மற்ற கட்சிகள் 2
மொத்தம் 196

தகவல் உதவி: இலங்கைத் தேர்தல் ஆணையம்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225. இதில் 196 உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்ற 29 உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலில் நியமிக்கப்படுவார்கள்.

 

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, இலங்கையில் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பதிவான வாக்குகளில் 5,098,927 வாக்குகளைப் பெற்று 93 இடங்களை வென்றிருக்கிறது. 45.7 சதவீத வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 8 தேர்தல் மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 47,32,669 வாக்குகளைப் பெற்று 83 இடங்களை வென்றிருக்கிறது. 42.4 சதவீத வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 5,15,963 வாக்குகளைப் பெற்று 14 இடங்களை அது வென்றிருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்ட எந்த மாவட்டத்திலும் வெற்றிபெறாவிட்டாலும் 5,43,944 வாக்குகளைப் பெற்று நான்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் 4.9 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது.

இந்த தேர்தலில் அதிக உறுப்பினர்களை வென்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணிக்கு தனித்து ஆட்சியமைப்பதற்குத்தேவையான அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்களான 113 பேர் கிடைக்கவில்லையென்றாலும், ரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டணி தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்திருப்பதால், ரணில் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு பெரும் சிக்கல் இருக்காது என்றே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.

 

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து விருப்ப வாக்குகளின் அடிப்படையில் தேர்வாகியுள்ளவர்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

1. சிவஞானம் சிறிதரன் (பெற்ற வாக்குகள் 72,058)

2. மாவை சேனாதிராஜா (பெற்ற வாக்குகள் 58,732)

3. எம் ஏ சுமந்திரன் (பெற்ற வாக்குகள் 58,043)

4. தர்மலிங்கம் சித்தார்த்தன் (பெற்ற வாக்குகள் 53,743)

5. ஈ சரவணபவன் (பெற்ற வாக்குகள் 43,289)

ஈபிடிபி கட்சி சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 16,399 வாக்குகளுடனும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் விஜயகலா மகேஸ்வரன் 13,071 வாக்குகளுடனும் யாழ் மாவட்டத்தில் தேர்வாகியுள்ளனர்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விருப்ப வாக்குகளின் அடிப்படையில் தேர்வாகவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version