5 பவண் தாலிச் சங்கிலியை பறித்த திருடன் அதை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் ஒன்று இந்திய ஐதராபாத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்திருடன் விழுங்கிய அந்த நகையை மீட்க முடியாமல் பொலிஸார் திணறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐதராபாத் சில கல கூடா பகுதியைச் சேர்ந்தவர் சங்கரய்யா. இவரது மனைவி பிரமிளா. தம்பதிகள் இருவரும் தினமும் காலை அந்த பகுதியில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். இதனை மாணிக்கேஸ்வரி நகரைச் சேர்ந்த விகாஸ் என்ற திருடன் நோட்டமிட்டுள்ளான்.
சம்பவத்தன்று பிரமிளா கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்ற போது திருடன் விகாஸ் பிரமிளா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவண் தாலிச் சங்கிலியை பறித்துள்ளான். உடனே பிரமிளா கூச்சல் போட்டார்.
விகாஸை கைது செய்த பொலிஸார் அவன் விழுங்கிய நகையை கைப்பற்ற விகாசை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
விகாஸ் வயிற்றில் எக்ஸ்ரே செய்ததும் வயிற்றுக்குள் செயின் இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்து நகையை எடுத்து தரும்படி பொலிஸார் கேட்டபோது மருத்துவர்கள் மறுத்து விட்டனர். அறுவை சிகிச்சை செய்தால் விகாஸ் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.
விகாஸ் மலம் கழிக்கும் போது சங்கிலி வெளியே வந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.