டுபாய் கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெற்ற சிறப்பு நிகழ்ச்­சியில் பிர­தமர் நரேந்­திர மோடி பங்­கேற்று பேசினார்.

அவ­ரது பேச்சை கேட்க ஏரா­ள­மான இந்­தி­யர்கள் ஆர்வம் காட்­டி­யதால் மைதா­னத்தில் நுழை­வ­தற்­காக முன்­ப­திவு செய்­யப்­பட்­டது.

சுமார் 40 ஆயிரம் பேர் வரை அமர வச­தி­யுள்ள டுபாய் கிரிக்கெட் மைதா­னத்தில் கூடுதல் வசதி செய்­யப்­பட்டு மொத்தம் 50 ஆயிரம் பேர் அமர ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இது தவிர மைதா­னத்­துக்கு வெளியே இருந்து மோடியின் பேச்சை கேட்க 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இட வசதி செய்­யப்­பட்­டது.

அதில் மோடி பேசி­ய­போது 50 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான இந்­தி­யர்கள் அங்கு உற்­சா­க­மாக குவிந்­தனர். இவர்கள் தவிர ஏரா­ள­மான உள்ளூர் மக்­களும் வந்­தி­ருந்­தனர். மாலை 3 மணி முதல் இந்­தி­யர்கள் அங்கு வரத் தொடங்­கினர். அவர்கள் நீண்ட வரி­சையில் காத்­தி­ருந்து மைதா­னத்­துக்குள் நுழைந்­தனர்.

ஆங்­கிலம், தமிழ், மலை­யாளம் ஆகிய மொழி­க­ளிலும் மோடி யின் பேச்சு உட­னுக்­குடன் மொழி பெயர்க்­கப்­பட்டு வானொலியில் ஒலித்­தன.

modi-em4ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 20 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட இந்­தி­யர்கள் உள்ளனர். இவர்­களில் தமிழர்களும், மலை யாளி­களும் அதிகம் உள்­ளனர். ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் வெளி­நாட்டு தலைவர் ஒரு­வ­ரது பேச்சை கேட்க இந்த அள­வுக்கு மக்கள் குவி­வதும், அவ­ரது பேச்சு வானொலியில் முக்­கி­யத்­துவம் கொடுத்து ஒலி­ப­ரப்­பா­வதும் இதுவே முதல்­முறையாகும்.

மோடியின் வரு­கையை முன்னிட்டு துபாய் கிரிக்கெட் மைதான பகு­தியே விழாக்­கோலம் பூண்­டது. ஏரா­ள­மான மக்கள் வந்து குவிந்ததால் தற்­கா­லி­க­மாக உணவுக் கடை­களும் திறக்­கப்­பட்­டன.

மக்கள் வந்து செல்­வ­தற்­காக அரசு சார்பில் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோடி நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

Share.
Leave A Reply

Exit mobile version