நம் இந்திய பெண்கள் என்னதான் எம்.என்.சி-யில் உயர் பதவி வகிக்கும் அளவிற்கு வளர்ந்தாலும். அவர்களுக்குள் இருக்கும் கூச்ச சுபாவாம், திருமணம் வாழ்வில் தங்களை பொருத்திக்கொள்ள அவர்கள் தயங்கும் தருணங்கள் போன்றவை பெரும்பாலும் இன்றளவும் கூட எள்ளளவும் மாறவில்லை.
கார்பரேட் மீட்டிங்கில் வெளுத்து வாங்கும் இவர்கள், கணவன், மனைவி தாம்பத்தியத்தின் ஆரம்ப காலத்தில் மிகவும் தயக்கத்துடன் தான் இருக்கிறார்கள். <
காதல் திருமணங்களில் இந்த சம்பவம் நடக்கும் வாய்ப்புகள் குறைவு, ஏனெனில் அவர்கள் முன்னரே ஒருவரை பற்றி ஒருவர் முழுவதும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
நிச்சயித்த திருமணங்களில் தான் இதுப் போன்ற சில சுவாரஸ்யமான தருணங்கள் அரங்கேறும். அதில், மனைவி, தனது கணவனிடம் தாம்பத்தியத்தை பற்றி எவ்வாறு பேசுவதென்பது பெரும் சிக்கலாக இருக்கும். இது சிக்கல் என கூறுவதைவிட, ஒரு விதமான தயக்கம் அல்லது வெட்கம் என கூறலாம்…..
17-1439795943-1fivesecretsaboutlovemakingyourwifedoesnotknowhowtotellyou
உதவிக்கு கேட்காமலேயே வர வேண்டும்

சமையல் அறையில், பாத்திரம் கழுவுவதில் இருந்து, படுக்கையறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் வரை மனைவி கேட்காமலேயே கணவன் உதவ வர வேண்டும் என்பதே பெண்களின் ஆசை. இதை பெரும்பாலும் ஆண்கள் தெரிந்துக் கொள்வதில்லை.

குழந்தை பிறந்த பிறகும் கூட…

குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு நேப்கின் மாற்றுவது வரை நீங்கள் பெண்கள் கூறும் வரை காத்திருந்து செய்யாமல், நீங்கலாக செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இது, உங்கள் இல்லற வாழ்க்கையை மேலோங்க செய்கிறது

எதையும் ரொமாண்டிக்காக செய்யுங்கள்
நீங்கள் ஒன்றும் ப்ரோக்ராம் செய்து வைத்த ரோபாட் இல்லை. எனவே, கூறியதை மட்டுமே செய்யாமல், உங்களுக்கான தனி பாணியில் கொஞ்சம் ரொமாண்டிக்காகவும் செயல்பட வேண்டும். இதற்கு வயது ஒரு தடையல்ல.
வார இறுதியிலாவது…
தினமும் இல்லாவிட்டாலும், வார இறுதி நாட்களிலாவது கொஞ்சம் ரொமாண்டிக் முகத்தை காண்பிக்க வேண்டியது அவசியம். இது, இருவருக்குள்ளும் ஓர் விதமான ஈர்ப்பை அதிகரிக்கும்.
அழகாக உணர வையுங்கள்
பெண்கள் யாராக இருந்தாலும், தங்களது கணவனுக்கு முன் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும், மற்ற பெண்களை விட தனது கணவனுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என ஆசைப்படுவார்கள். எனவே, அவர்களை அழகாக உணர வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
அழகை மெச்சிக்கணும் ஆண்களே…
எப்போதும் போல சாதாரணமாக அவர்கள் உடை உடுத்தி வந்தாலும், ” நீ இந்த கலர் புடவைல ரொம்ப அழகா இருக்க….” என்று கூறுங்கள். ஆண்களுக்கு பொய் சொல்லவா கற்றுத்தர வேண்டும்.
கட்டாயப்படுத்த வேண்டாம்
பெண்களை விட அதிகம் ஆண்கள் தான் தாம்பத்திய உறவில் இன்பம் காண்கின்றனர். ஏனெனில், ஆண்கள் மற்றும் பெண்களின் தாம்பத்திய இன்பத்தில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
உடல்நிலையை புரிந்துக் கொள்ளுங்கள்…
பெண்களின் உடல் அமைப்பு அனைத்து நாட்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. எனவே, அவர்களின் நிலையை அறிந்து, புரிந்துக் கொண்டு நடக்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்த கூடாது என பெண்கள் எதிர்பார்கிறார்கள்.
அவர்களிடம் உங்களுக்கு பிடித்தவை பற்றி கூறுங்கள்
நிறைய கணவன்மார்கள், அவர்களது மனைவியிடம் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என வெளிப்படையாக கூற மாட்டார்கள். என்ன தான் வகை வகையாக சமைத்து கொடுத்தலும், “ஆ, நல்ல இருந்துச்சு..” என ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுவார்கள். ஆனால், பெண்கள் தங்களிடம், தாம்பத்திய உறவில் தனது கணவனுக்கு என்ன பிடித்திருக்கிறது என அவர்களே கூற வேண்டும் என எதிர்பார்கிறார்கள்.
அன்றைய பொழுது இனிதே விடிய…
நீங்கள் அவர்களிடம் பிடித்ததை கூறிய மறுநொடி, “அட.. ச்சீ போங்க வெட்கமா இருக்கு..” என்ற பதில் காட்டாயம் வரும். இது, உங்களது அன்றைய பொழுதை கட்டாயம் நல்ல விடியலுடன் துவக்க உதவும்.
Share.
Leave A Reply

Exit mobile version