கென்யாவின் வட பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் அமைந்துள்ளது உமோஜா கிராமம்.

கடந்த 1990 ஆம் ஆண்டு 15 பெண்கள் கூட்டாக இணைந்து இந்தக் கிராமத்தில் வாழத்தொடங்கினர்.

இவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர்.

தற்போது இந்தக் கிராமத்தில் 47 பெண்கள் மற்றும் 200 குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.

பிரிட்டன் இராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்றப் பெண் இந்த கிராமத்தின் தலைவியாக செயற்பட்டு வருகிறார்.

ஆபரணங்கள் செய்து விற்பதின் மூலமாகவும், குறித்த பகுதியில் கூடாரங்களால் ஆன ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலமாகவும் இப்பெண்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

அடிமைபோல் நடத்தும் பல ஆண்களுக்கு மத்தியில் வாழும் பெண்கள் தமது வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர்களைப் போலன்றி தமது வாழ்க்கை சுதந்திரமானதாக அமைந்திருப்பதாக இங்கு வாழும் பெண்கள் கூறுகின்றனர்.

இந்த கிராமத்தைச் சுற்றிப் பார்க்க ஆண்களுக்கு தடையேதும் இல்லையென்றாலும், அவர்களால் இங்குள்ள பெண்களின் அனுமதியின்றி வெகுநாட்கள் தங்க முடியாது.

அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள ஆண்கள் சிலர் அவ்வப்போது இங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதுண்டாம்.

அதற்கெல்லாம் அஞ்சாமல், அனைத்துத் தடைகளையும் தைரியமாக எதிர்கொண்டு, இந்த கிராமத்தில் வாழும் 247 பெண்களும் பத்து குடும்பங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

87cdc727-e773-4aee-a295-7a5137da3c76-2060x1373

Share.
Leave A Reply

Exit mobile version