இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, மனைவி அனோமா உட்பட அவரது ஜனநாயக கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது ராணுவ தளபதியாக இருந்தவர் சரத்பொன்சேகா.லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தவர். ஆனால் இறுதிப் போருக்குப் பின்னர் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுடன் ஏற்பட்ட மோதலால் சிறைக்குப் போக நேர்ந்தது. இதனால் ராஜபக்சேவின் எதிரியாக பொன்சேகா உருவெடுத்தார்.
பின்னர் ஜனநாயகக் கட்சி என்ற கட்சியையும் பொன்சேகா தொடங்கினார். 2010ஆம் ஆண்டு ஜே.வி.பி.யுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலை பொன்சேகா கட்சி எதிர்கொண்டது.அத்தேர்தலில் 7 எம்.பி.க்கள் பொன்சேகா கட்சிக்குக் கிடைத்தனர். இத்தேர்தலிலுல் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி தேர்தலில் போட்டியிட்டது.

பொன்சேகா, மனைவி அனோமா பொன்சேகாவும் போட்டியிட்டனர். ஆனால் இவர்களுக்கு சொற்ப வாக்குகள்தான் கிடைத்தது.

ஒட்டுமொத்த பொன்சேகா கட்சியையே சிங்கள வாக்காளர்கள் மண்ணைக் கவ்வ வைத்துவிட்டனர். கொழும்பு மாவட்டத்தில் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சிக்கு 5,238 வாக்குகளே கிடைத்தன.

கம்பகா மாவட்டத்தில் 4,706 வாக்குகளை மட்டுமே ஜனநாயகக் கட்சி பெற்றது. கொழும்பில் பொன்சேகாவும் கம்பகாவில் மனைவி அனோமா பொன்சேகாவும் போட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை அழித்த சரத்பொன்சேகாவுக்கு, அதே  தமிழர்கள்   2010 ஆம்  அண்டு ஜனாதிபதி தேர்தலில்    பெரும்பான்மை  வாக்குகளை செலுத்தினார்கள்  இங்கு குறிப்பிடதக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version