பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்த பின் னர், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரும் முயற்­சியில், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஈடுபட்­டுள்­ள­தாக கடந்த வாரம் இணை­யங்­களில் பர­ப­ரப்­பாக செய்­திகள் உலா­வின.

சமூக வலைத்­த­ளங்­களில் இது­பற்­றிய செய்­திகள் இன்னும் சூடா­கவே விவா­திக்­கப்­பட்­ட­தையும் காண முடிந்தது.

முக­நூலில் ‘முத­ல­மைச்­சரைக் காப் போம்’ என்ற ஒரு தளம் கூட உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­த­லுக்கு முன்னர், இந்தப் பிர­சா­ரங் கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட முறை ஒரு திட்­ட­மிட்ட ஒழுங்­கிற்கு கீழ் முறைப்­ப­டுத்­தப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவே தெரி­கி­றது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான ஒரு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­ப­டு­வது நடைமுறைச் சாத்­தி­யமா? அதற்கு சட்­டத்தில் இட­முள்­ளதா?

இது­பற்­றி­யெல்லாம் யோசிக்­கா­ம­லேயே இந்தச் செய்தி பெரிதும் பரப்­பப்­பட்­டது.

எப்­ப­டி­யா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பெரும் பிளவு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வது தான் இதன் அடிப்­படை நோக்கம் என்­பதை சமூக வலைத்­தளப் பிர­சா­ரங்­களில் இருந்து உணர முடிந்­தது.

இந்தப் பிர­சா­ரங்­களில் முத­ல­மைச்­ச­ருக்கு எந்­த­ள­வுக்கு உடன்­பாடு இருக்­கி­றது என்று தெரி­யா­விட்­டாலும், தெரிந்தோ தெரி­யா­மலோ அவரும் அதற்குத் துணை­போ­யி­ருக்­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அதே­வேளை, முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் கொண்டு வரப்­ப­டு­வது சாத்தியமா என்ற கேள்­விக்கு முதலில் விடை தேட லாம்.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் கொண்டு வரப்­ப­டு­வது சாத்­தி­ய­மில்லை என்று தெரிவித்­தி­ருந்தார் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த- வடக்கு மாகாண எதிர்க்­கட்சித் தலைவர் தவ­ராசா.

13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்­கு­வது தொடர்­பான நடை­மு­றைகள் எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று அவர் கூறியிருந்தார்.

அது உண்­மையே. 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில், ஆளு­நரின் நிய­மனம், அவரது பொறுப்­புகள், கட­மைகள், அவ ரைப் பதவி நீக்கும் முறைகள் எல்­லாமே குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும், முத­ல­மைச் சர் ஒரு­வரை நம்பிக்கையில்லாப் பிரே­ரணை மூலம் அகற்­று­வது பற்றி ஏதும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

13ஆவது திருத்­தச்­சட்டம் ஆளு­ந­ரையே வலு­வா­ன­வ­ராக வைத்­தி­ருக்­கி­ற­தே­யன்றி, முத­ல­மைச்­சரை அல்ல. முத­ல­மைச்­சரை வெறும் பொம்­மை­யாக வைத்­தி­ருப்­பதால் தான், அது­பற்றிக் கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை.

மாகா­ண­சபைக் கூட்­டத்தில், முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்டு வரு­வது தொடர்­பான வழி­மு­றைகள் ஏதும் 13ஆவது திருத்தச் சட்­டத்தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

ஆனாலும், மாகா­ண­சபைக் கூட்­ட­மொன்றில் அது­பற்­றிய ஒரு முன்­மொ­ழிவை சமர்ப்­பித்து, தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்ற எந்த தடையும் இருக்­காது என்றே தெரி­கி­றது.

பொது­வான ஜன­நா­யக முறையில் பெரும்­பான்­மை­யோரின் நம்­பிக்­கை யைப் பெற்ற ஒருவர் தான் பொறுப்பில் இருக்க முடியும்.

அந்த வகையில் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டலாம். ஆனால், அதை வைத்து முத­ல­மைச்­சரின் பத­வியைப் பறிக்க முடி­யாது.

அதே­வேளை, ஆளுநர் ஒருவர் நினைத்தால், பெரும்­பான்மை பலம் உள்ள வேறொ­ரு­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்க முடியும்.

அதற்கு உதா­ரணம், கடந்த ஜன­வரி மாதம் நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலை அடுத்து, ஊவா மாகாண முத­ல­மைச்­ச­ராக சசீந்­திர ராஜபக்ஷ இருந்த போதே, ஆளுநர் முன்­பாக பெரும்­பான்­மையை நிரூ­பித்து, அந்தப் பத­வியைக் கைப்­பற்றிக் கொண்டார் ஹரீன் பெர்­னாண்டோ.

அதற்கு எதி­ராக சசீந்­திர ராஜபக் ஷ உயர்­நீ­தி­மன்­றத்தில் தொடர்ந்த அடிப்­படை உரிமை வழக்­குகள் கூட தள்­ளு­படி செய்­யப்­பட்­டன.

இதன்­மூலம், பெரும்­பான்மை ஆத­ரவை இழந்த முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்குப் பதி­லாக- அவரை பத­வியில் இருந்து நீக்கம் செய்­யா­ம­லேயே, மற்­றொ­ரு­வரை அந்தப் பத­விக்கு நிய­மிக்­கலாம் என்­ப­தற்கு சட்­ட­அங்­கீ­காரம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கையில், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம். ஆனால், அதற்கு ஆளுநர் ஒத்­து­ழைக்க வேண்டும்.

வடக்கு மாகாண ஆளு­ந­ராக இருக்கும் பாலி­ஹக்­கார இத்­த­கை­ய­தொரு நட­வ­டிக்­கைக்கு ஒத்­து­ழைப்­பாரா? என்பது சந்­தேகம்.

ஆனால், இவற்­றுக்கு முன்னர், வடக்கு மாகா­ண­ச­பையில் உள்ள பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் முதலமைச்சர் மீது நம்­பிக்­கை­யில்லை என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

அதை­விட முக்­கியம், இன்­னொ­ரு­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்க இணக்­கப்­பாட்டை எட்ட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள வடக்கு மாகா­ண­ச­பையின் 30 உறுப்­பி­னர்­களும், இந்த முயற்­சிக்கு ஆதரவ­ளிப்­பார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

ஏற்­க­னவே அவைத்­த­லைவர், உள்­ளிட்ட பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள், தமக்கு அப்­ப­டி­யொரு எண்­ணமே இல்லை என்று தெளி­வாகத் தெரி­வித்­துள்­ளனர்.

எனவே, பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கு­வ­தற்கு வாய்ப்­பில்லை.

அப்­ப­டி­யொரு சூழல் ஏற்­பட்­டாலும் கூட அடுத்த முத­ல­மைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தால், அதற்கு இணக்கப்பாடு ஏற்­படும் சூழல் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­ப­டுமா? என்­பதும் சந்­தேகம்.

இப்­ப­டி­யான நிலையில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைப் பதவி நீக்கம் செய்யும் முயற்சி என்­பது நடைமுறைச் சாத்­தி­ய­மற்ற ஒன்­றா­கவே இருக்கும்.

அத்­துடன் தற்­போ­துள்ள சூழலில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைப் பதவி நீக்­கு­வ­தற்­கான ஒரு நகர்வை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுக்கத் துணி­யாது.

அது ஏற்­க­னவே இருந்து வரும் விரி­சலை இன்னும் வலுப்­ப­டுத்தி விடும் என்ற உண்மை கூட்­ட­மைப்பில் உள்ள அனை­வ­ருக்கும் தெரிந்த விடயம்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்றும் ஒரு காரி­யத்தை கூட்டமைப்பு முன்­னெ­டுக்­கு­மானால், அதனை விட மிகப்­பெ­ரிய முட்­டாள்­த­ன­மாக செயல் வேறேதும் இருக்க முடி­யாது.

ஏனென்றால், அவ­ருக்கு உள்ள செல்­வாக்கும், அண்­மையில் அவ­ருக்கு திடீ­ரென அதி­க­ரித்­துள்ள ஆத­ரவும், பின்­பு­லமும், ஒட்­டு­மொத்த தமிழர் தரப்­புக்­குள்­ளேயும் தெளி­வான பிள­வு­களை ஏற்­ப­டுத்தி விடும்.

அதை­விட, யாழ்ப்­பா­ணத்தில் 132, 000 விருப்பு வாக்­கு­களைப் பெற்­றவர் என்ற அடிப்­ப­டை­யையும் மறந்து விடலா­காது.

அவர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேற்­றப்­படும் நிலை ஒன்று ஏற்­பட்டால், அவரை அரவணைத் துக் கொள்­ளவும், ஆத­ரவு கொடுக்­கவும், அவரை வைத்து அர­சியல் சவாரி செய்­யவும் இன்­னொரு தரப்புக் காத்­தி­ருக்­கி­றது. இந்­த­நி­லையில், விக்­னேஸ்­வரன் விவ­கா­ரத்தில் பொறு­மை­யுடன் கையாள வேண்­டிய அவ­சியம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இருக்­கி­றது.

அந்தப் பொறுமை கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்கு இருக்கும் என்றே கரு­தப்­ப­டு­கி­றது,

இப்­ப­டி­யான நிலையில், விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா தீர்­மானம் என்­பது வெறும், நடைமுறைச் சாத்­தி­ய­மற்ற ஒன்­றா­கவே இருக்கும்.

எனினும், இப்­ப­டி­யொரு செய்தி அடிப்­படை ஆதாரம் இல்­லாமல் புகையத் தொடங்­கி­யுள்­ளது என்றால், இதன் ஊடாக ஏதோ ஒரு தரப்பு நன்மை அடையத் துடிக்­கி­றது என்­பதை உணர முடி­கி­றது.

முக­நூலில் தனிக்­க­ணக்குத் திறந்து பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­படும் அள­வுக்கு நிலை­மைகள் மோச­மாகி விட்டதாகத் தெரி­ய­வில்லை.

ஆனால், இத்­த­கைய பிர­சா­ரத்தின் ஊடாக, தேர்தல் முடி­வு­களை மாற்­றி­ய­மைக்­கவும், கூட்­ட­மைப்பை பலவீனப்ப­டுத்தி பிள­வு­ப­டுத்­த­வுமே, முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­கி­றது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில் தனது முத­லா­வது அறிக்­கையில், சில தெளி­வற்ற விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார்.

பின்னர், தாம் தேர்தல் முடியும் வரை எதையும் பேசாமல் இருக்கப் போவ­தாக கூறி­யி­ருந்தார்.

அடுத்த நாளே மற்­றொரு நீண்ட அறிக்கை மூலம், தான் நடு­நி­லை­யாக இருக்கப் போவ­தாக கூறிக் கொண்டு, கூட்­ட­மைப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடிய விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந் தார்.

நடு­நிலை என்­ப­தற்கு அப்பால் சென்று- இரண்­டா­வது அறிக்­கையை வெளி­யிட்­டதும், தேர்தல் முடியும் வரை பேசாமல் இருக்கப் போவ­தாக கூறி­விட்டு, இரண்­டா­வது அறிக்­கையை வெளி­யிட்டு மக்­களைக் குழப்­பி­யதும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில், முரண்­பா­டான விட­யங்­க­ளா­கவே இருந்­தன.

இவை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் தலை­வர்­க­ளுக்கு நிச்­சயம் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும், அதை அவர் கள் பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தா­வி­டி னும், அவர்­க­ளுக்கு வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்­பதில் சந்தே­க­மில்லை.

ஏனென்றால் இந்தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இன்­னொரு தரப்பு காத்­தி­ருக்கும் நிலையில், அவர்­களால் இதனை ஜீர­ணிக்க முடி­யாது.

அதற்­காக கூட்­ட­மைப்புத் தலை­வர்கள், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் அணு­கிய முறைகள் எல்­லாமே சரி­யா­னவை என்றும் கூற முடியாது.

எல்லாத் தரப்பிலும் தப்பும் தவறுகளும் இருப்பதை மக்கள் உணர்கிறார்கள்.

இந்தநிலையில், தேர்தலுக்குப் பின் னர், தமிழ்த் தேசிய அரசியலின் எதிர் காலம் என்னவாகப் போகிறதோ என்ற கேள்வியும் கவலையும் பலரிடம் தோன் றியிருப்பதை உணர முடிகிறது.

அரசியல் என்பது எப்போதுமே பெரும்பாலானவர்களுக்கு நற்பெயரை தேடித் தரும் ஒன்றாக இருப்பதில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட தான் நீதியரசராக தேடிய நற்பெயர் அரசியலால் பாதிக்கப்படுமே தவிர, உயராது என்று ஆரம்பத்திலேயே கூறியி ருந்தார்.

அது உண்மை என்பதை இப்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

முன்னர் அவர்களை தூற்றியவர்கள் இப்போது போற்றுகிறார்கள். முன்னர் அவரை ஏற்றியவர்கள் இப்போது தூற்றும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு தரப்பினருமே தமிழர்கள் தான்.

ஆக தமிழர்கள் இன்னமும் ஒன்றாக இல்லை- ஓரணியாக இல்லை என்பதை தான் இந்தப் பிளவு காட்டி நிற்கிறது.

தேர்தலிலும் இது எதிரொலிக்கப் போகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version