ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை (21) காலை சுபநேரமான 10.07க்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 19ஆவது பிரதமாராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துகொண்டனர்.