இலங்கை நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தேசிய பட்டியல்க்கு முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைவருக்கு எதிராக செயலாளர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கட்சியின் கூட்டுப் பொறுப்புகளிலிருந்து விலகி தன்னிச்சையாக இந்த நியமனத்தில் முடிவு எடுத்துள்ளதாக பொதுச் செயலாளரான வை. எல். எஸ். ஹமீட் குற்றம் சாட்டுகின்றார்

நாடாளுமன்றத் தேர்தலில் ஐதே முன்னணியில் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேர்தலுக்கு முன்னர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக கட்சியின் செயலாளரான வை. எல். எஸ் ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் ஆகியோரின் பெயர்களை முன்மொழிந்திருந்தது.

ஆனால், தேர்தலுக்குப் பின்னர் ஐதே முன்னணியின் தேசியப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அ.இ.ம. காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்ட எம். நவவியின் பெயரை முன் மொழிந்துள்ளது.

இது தொடர்பாக அ.இ.ம. காங்கிரஸ் தலைவர் மீது சீற்றமடைந்துள்ள கட்சியின் பொதுச் செயலாளரான வை. எல். எஸ் ஹமீட் தனக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை சதி செய்து தலைவர் பறித்து விட்டதாக குற்றம் சாடடியுள்ளார்.

இது தொடர்பாக அ.இ.ம. காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

150821163734_acmc_lanka_512x288_bbc_nocreditதேர்தல் பிரசாரத்தின்போது, தேசியப் பட்டியல் தொடர்பான சுவரொட்டி ஒன்று

Share.
Leave A Reply

Exit mobile version