யாழ்.கொட்டடி பகுதி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுத்திகளில் இருந்து இரு சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.
கொட்டடி 3ஆம் ஒழுங்கை முத்தம்மாள் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பூராஜா (வயது 38) என்பவர் வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மரணத்திற்கு மது போதையே காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரளைகளின் மூலம் தெரிய வருகிறது.
அதேவேளை யாழ். கேணியடி வைரவர் கோவிலுக்கு பின்புறமாக அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 75 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத் தானே எரித்து கொண்டுள்ளார் என்றும் மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும், தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.