சவூதி அரேபிய மன்னர் சல்மான் அண்மையில் பிரான்ஸின் தென்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார். உலகின் மிகவும் ஆடம்பரமான மிகச்சிறந்த விடுமுறை தலத்துக்கு தான் அவர் விஜயம் செய்தார்.
2015 ஜுலை 25இல் மூன்றுவார கால ஆடம்பர விடுமுறையாக இது தொடங்கியது. இவர் தனது பரிவாரங்களுடன் நைஸ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஆடம்பர விமானங்களில் வந்து சேர்ந்தார்.
உறவினர்கள், நண்பர்கள், அடிவருடிகள், கூலிப்படையினர் என சுமார் ஆயிரம் பேர் இதில் அடங்குவர். இவர்களுள் பலர் ஒரு வார காலத்திலேயே தமது விடுமுறைத் திட்டத்தை கைவிட்டு விட்டு 2015 ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை தென் பிரான்ஸிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
காரணம் மன்னர் தங்கியிருந்த ஆடம்பர மாளிகையை அண்டிய பகுதியில் உள்ள கடற்கரை பொதுமக்களுக்கு மூடப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
இந்த எதிர்ப்பின் காரணமாக மன்னரும் அவரின் பரிவாரங்களும் அங்கு சில அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று.
“இந்த விடுமுறை பயணமானது உலக சனத்தொகையில் பெரும்பாலானவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. உள்ளூர் சம்பிரதாயங்கள் அனைத்தும் இந்த விடுமுறைக்காக தூக்கி எறியப்பட்டன” என்று ஏ.எப்.பி. செய்திச் சேவை இதனை வர்ணித்துள்ளது.
பொதுமக்களின் பணத்தை விரயம் செய்து இவ்வாறானதோர் விடுமுறை பயணத்துக்கான தகுதி மன்னர் சல்மானுக்கு உள்ளதா?
ஈரானுக்கும் யேமனுக்கும் எதிராகத் தனது அமெரிக்க, இஸ்ரேல் எஜமானர்களின் திட்டத்தை அமுல் செய்து கொண்டு 2015 மார்ச் முதல் யெமனில் பட்டினியால் வாடும் அப்பாவி முஸ்லிம்களை குண்டு வீசிக் கொலை செய்து கொண்டு இவ்வாறான ஒரு பயணத்தில் அவர் எவ்வாறு ஈடுபட முடியும்.
சவூதி அரேபியா யெமனில் மேற்கொண்ட கண்மூடித்தனமான விமானத் தாக்குதலால் ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி அப்பாவி மக்கள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.
புனித றமழான் மாதத்தில் கூட எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஈவிரக்கமின்றி இந்தக் குண்டு வெடிப்பு நீடித்தது. இதன் மூலம் சுமார் 21 மில்லியன் யெமன் மக்கள் பட்டினியால் வாடும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதனால்தான் சவூதி மன்னருக்கு ஓய்வும், விடுமுறையும் தேவைப்பட்டதா? இதனால் தான் அவர் உலகின் மிகவும் ஆடம்பரமான அதிசிறந்த நவீன வசதிகள் கொண்ட உல்லாசபுரியை நாடிச் சென்றாரா?
ஓரு காலத்தில் உலகின் அதி சிறந்த பிரமுகர்களும் தலைவர்களும் தங்கிய இடம்தான் பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள இந்த வெலாரியஸ் மென்ஷன்.
கற்பாறைகள் நிறைந்த பகுதியில் அழகான கடற்கரை காட்சிகளோடு பல மீட்டர்கள் தூரம் நீண்டு செல்லும் கண்ணைக் கவரும் ஒரு பிரதேசமே இதுவாகும்.
கடற்கரையில் இருந்து நேராக இந்த மாளிகைக்குள் செல்லும் வகையில் மோட்டார் தொடரணி வசதி மற்றும் மின்தூக்கி வசதி என்பனவும் ஏற்படுத்தப்பட்டன.
79 வயதான மன்னரை வரவேற்று உபசரிக்க பத்து வாகனங்களைக் கொண்ட ஒரு தொடரணி தயார் நிலையில் இருந்தது. தான் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இந்த இடத்துக்கு பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என்றும், தான் அங்கிருக்கும் காலப்பகுதியில் தனக்கு பிரத்தியேகமான கடல்கரை வலயம் ஒன்று தான் தங்கியிருக்கும் மாளிகையை சுற்றி உருவாக்கப்பட வேண்டும் என்றும் மன்னர் கேட்டிருந்தார்.
சில காலங்களுக்கு முன்பிருந்தே மன்ன ரின் விஜயத்துக்கான தடல்புடல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு பல செயற்பா டுகள் இடம்பெற்றதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிதாக யன்னல்கள் பொருத்தப்பட்டன, புதிய மலர் வகைகள் வைக்கப்பட்டன. தான் தங்கியிருக்கும் விடுமுறை இல்லத்தின் மாடத்தில் இருந்து தங்குதடையின்றி காட்சிகளைக் கண்டு களிக்க அவரு க்கு மாடத்தில் அமர்ந்து இருக்கக் சுடிய சிம்மாசனம் போன்ற ஓர் ஆசனமும் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
மன்னரும் அவரின் பரிவாரங்களும் இங்கிருந்து ஏனைய சுற்றுலா இடங்களைப் பார்வையிடச் செல்வதற்காக 400 ஆடம்பர சலூன் வகைக் கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
எவ்வாறேனும் பொதுமக்களுக்கான கடற்கரை மூடப்பட்டதை அடுத்து சுதந்திரத்தையும் உரிமையையும் பெரிதாக மதிக்கும் அந்த மக்கள் கொதிப்படைந்தனர்.
இந்த சுற்றுலா மாளிகையைச் சுற்றி 300 மீற்றர் அல்லது (985 அடி) பிரத்தியேக வலயம் பிரகடனம் செய்யப்பட்டமைக்கு அப்பால் பொதுமக்கள் கடற்கரையும் மூடப்பட்டமையே மக்கள் ஆத்திரமடைய காரணமாயிற்று.
கடற்கரையில் இருந்து மாளிகைக்கு நேரடியாக ஒரு மின்தூக்கி அமைக்கப்பட்டதும் அதற்கு பெரும்பாலான கடற்கரைப் பகுதியில் மணல் அகழ்வுகள் இடம் பெற்றமையும் மக்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது.
கோடை விடுமுறை என்பது நண்பர்களோடும் உறவுகளோடும் செலவிடுவதற்கு ஒரு சிறந்த காலப்பகுதியாகும் என்பது உண்மையே. ஆனால் அதற்காக ஆயிரம் பேரை அழைத்துச் செல்வது என்பது சற்று அதிகமானதாகும்.
மன்னர் சல்மானின் பரிவாரங்கள் அந்த கடற்கரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டன. அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவர் தங்கியிருந்த மாளிகையைச் சூழவுள்ள இடங்களை சுற்றி வளைத்துக் கொண்டனர். ஏனைய சுமார் 700 பேர் கேன்ஸ் நகர ஹோட்டல்களில் இடம்பிடித்துக் கொண்டனர்.
ஏண்ணெய் வள நாட்டின் இந்த மன்னர் பரிவாரங்களின் வருகையால் அந்த இடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் வெவ்வேறு இடங்களில் நிலைகொண்டிருந்தனர்.
இந்தப் பிரதேசம் மற்றும் இதனை அண்டிய பகுதிகள் வழமையாக விடுமுறையை கழிக்க வருபவர்களாலும் சூரியக் குளியலுக்கு வருபவர்களாலும் நிரம்பி வழியும் ஒரு பிரதேசமாகும்.
ஆனால், மன்னர் சல்மா னின் தனிப்பட்ட விடுமுறை விஜயத்துக்காக கடற்கரை பொதுமக்களுக்கு மூடப்பட்டது. அதுபோக 300 மீற்றர் தனிப்பட்ட கடல் வலயத்துக்குள்ளும் யாரும் வரவிடாமல் தடுக்கப்பட்டது.
மன்னரின் வருகைக்காக இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை நிறுத்துமாறு கேட்டு இந்த விலாரிஸ் நகரின் மேயர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். முன்னர் சல்மானின் தனிப்பட்ட வசதிகள் கருதியே இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னரை அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து கடற்கரைக்கும் அங்கிருந்து அவர் தங்கியிருக்கும் மாளிகைக்கும் மிக இலகுவாக சுமந்து செல்லக் கூடிய வகையில் ஒரு தற்காலிக மின்தூக்கி நிர்மாணிக்கப்பட்டது. இதற்கான தூண்களை நிறுவ கடற்கரையின் பெரும் பகுதி தோண்டப்பட்டதை மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
மன்னர் சல்மானின் இந்த விடுமுறை விஜயமானது உண்மையில் உலகில் பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் மற்றும் படை எடுப்புக்கள் காரணமாக சுமார் 59.5 மில்லியன் முஸ்லிம்கள் தமது சொந்த நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழுகின்றனர்.
இந்தத் தாக்குதல்களில் சவூதி ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவும் சுறுசுறுப்பாகவும நிதி உதவிகளை வழங்கியும் ஏனைய வழிகளிலும் ஒத்துழைத்து வருகின்றனர்.
அரச குடும்பம் என்ற கருப்பொருள் இஸ்லாத்துக்கு புதிய விடயமல்ல. ஆனால் அங்கு போதிக்கப்பட்டுள்ள எளிமை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன இங்கு தெட்டத்தெளிவாக மீறப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு கலீபா உமரின் ஆட்சி யின் போது ஒருவர் கலீபாவை இரவு நேரத்தில் சந்திக்க வந்தார். அப்போது கலீபா ஒளி விளக்கின் துணையில் வேறு ஒரு வேலையில் மும்முரமாக இருந்தார். கலீபா உமர் மெதுவாக அவரிடம் வந்த விடயத்தை வினவினார்.
அது ஒரு பரஸ்பர நோக்கிலான விஜயம் என்று அவர் பதில் அளித்தார். உடனே கலீபா விளக்கின் ஒளியை நிறுத்திவிட்டார். அங்கு இருள் சூழ்ந்து கொண்டது. வந்தவர் ஏன் விளக்கை நிறுத்திவிட்டீர்கள் என்று வினவினார்.
“இந்த விளக்கில் இருக்கும் ஒளி அரசுக்கு உரியது. நான் அரச அலுவல் ஒன்றிலேயே ஈடுபட்டிருந்தேன். நீங்கள் வந்திருப்பது தனிப் பட்ட காரணம். தனிப்பட்ட தேவைக்காக அரச வளத்தை பாவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது” என்று உமர் பதில் அளித்தார்.
ஏளிமைக்கும் பொறுப்புக் கூறலுக்குமான மிகச் சிறந்த தெளிவானதோர் உதாரணமாக இது திகழ்கின்றது.
இதேவேளை, சவூதி அரேபிய ராஜதந்தி ரிகளும் சில தனிநபர்களும் பிரான்ஸ் மருத் துவமனைகளில் மருத்துவ சோதனைகளை மேற் கொண்டமைக்காக 3.7 மில்லியன் யூரோக்களை செலுத்தாமல் வந்துள்ளனர் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி மன்னர் பிரான்ஸிலிருந்து புறப்படுமுன் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாரிஸ் மருத்துவ மனைக்கு 3.7 மில்லியன் யூரோக்களை செலுத்தவதே நல்லது என்று அந்த மருத்துவ மனையின் டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதோர் மன்னர் எப்படி முஸ்லிம்களின் இரு பெரும் இறை இல்லங்களான மக்கா, மதீனா என்
மூன்று வார கால விடுமுறைக்காக பில்லியன் கணக்கான பணத்தை வீணடிக்கும் ஒருவர் எப்படி இஸ்லாத்தின் பிரதிநிதியாக இருக்க முடியும்? உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பட்டினியால் வாடுகின்ற போது இப்படிப் பொதுமக்கள் பணத்தை வீணடிக்கும் ஒருவர் எப்படி முஸ்லிம் உலகின் தலைவராக இருக்க முடியும்?.
-பாரூக்-
The 79-year-old Saudi royal touched down by private Boeing 747 at nearby Nice airport on Saturday